சிலம்பத்தில் மேலும் ஒரு சாதனை!!!

50 கிமீ தூரம் சிலம்பம் சுழற்றியவாறு ஸ்கேட்டிங் செய்து நோபல் வேல்டு ரெக்கார்ட்ஸ் விருது பெற்றார் கோவை சிறுவன்.

சிலம்பத்தில் மேலும் ஒரு சாதனை!!!

கோவை சின்னவேடம்பட்டி பகுதியை சேர்ந்தவர் உமா மகேஸ்வரி. இவரது மகன் தன்ஷிக்(9) தனியார் பள்ளியில் 4ம் வகுப்பு பயின்று வருகிறார். இவர் கடந்த ஒரு வருடங்களாக சிலம்பம் ஸ்கேட்டிங் ஆகியவற்றை வி.ஆர்.சிலம்பம் ஃபோர்ட்ஸ் அகாடமியில் பயிற்சி பெற்று வந்துள்ளர்.

இந்நிலையில் சின்னவேடம்பட்டி பகுதியில் உள்ள கெளமார மடாலயத்தை சுற்று 200 லேப்ஸ்(50 கிமீ) சுலம்பம் சுழற்றியவாறே ஸ்கேட்டிங் செய்து நோபல் வேல்டு ரெக்கார்ட்ஸ் விருது பெற்றுள்ளார்.

இவருக்கு வி.ஆர்.சிலம்பம் ஃபோர்ட்ஸ் அகாடமியின் சேர்மேன் திலீப் குமார் மற்றும் ஸ்கேட்டிங் இந்திய அணியின் பயிற்சியாளர் ராகுல் பாண்டியன் ஆகியோர் விருது வழங்கி பாராட்டினர்.

மேலும் படிக்க | சிலம்பத்தில் சாதனை படைத்த 10 வயது சிறுவன்!!!