செறிவூட்டும் அரிசி வழங்குதல் தொடர்பான ஆலோசனைக் கூட்டம்...! அமைச்சர் சக்கரபாணி பங்கேற்பு..!

செறிவூட்டும் அரிசி வழங்குதல் தொடர்பான ஆலோசனைக் கூட்டம்...! அமைச்சர் சக்கரபாணி பங்கேற்பு..!
Published on
Updated on
1 min read

சென்னை கலைவாணர் அரங்கில்  உணவுப் பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி தலைமையில் தமிழ்நாடு நுகர் பொருள் வாணிபக் கழகத்தின் அரவை ஆலை முகவர்களுடன் பொது விநியோக திட்டத்தில் செறிவூட்டும் அரிசி வழங்குதல் தொடர்பான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

அந்த கூட்டத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் சக்ரபாணி, கடந்த ஆண்டுகளை விட ரேஷன் அரிசி கடத்தப்படுவது நான்கு மடங்கு குறைந்திருக்கிறது. பொது விநியோகத் திட்டத்தின் கீழ் ஆரோக்கியமான ஊட்டச்சத்து நிறைந்த செறிவூட்டப்பட்ட அரிசியை எவ்வாறு தயாரிப்பது என்பது குறித்தும் அதனை பொது விநியோக திட்டத்தின் கீழ் வழங்குவது தொடர்பாக தற்போது அரவை ஆலை முகவர்களுடன் ஆலோசனை நடத்தப்பட்டிருக்கிறது.

மேலும், மத்திய அரசின் அறிவுறுத்தலின் படி ஏப்ரல் 1 ஆம் தேதி முதல் தரம் உயர்த்தப்பட்ட அரிசியை வழங்குவதற்கான பணிகள் நடைபெற்று வருவதாகவும், அந்த அரிசியினை உட்கொள்வதன் மூலமாக உடலின் ஆரோக்கியம் அதிகரிக்கும் என்றும் உடலில் ஏற்படும் நோய்களைக் குறைக்கும் வகையில் ஆரோக்கியமான அரிசி தயாரிக்கப் படுவதாகவும் இரும்பு, ஃபோலிக் ஆசிட் போன்ற கூடுதல் ஊட்டச் சத்துக்கள் நிரம்பிய தரம் உயர்த்தப்பட்ட அரிசியாக தயாரிக்கப் படுகிறது எனவும் கூறியுள்ளார்.

பின்னர், அரிசிகள் சேதமடைவதைத் தவிர்க்கும் வகையில் கூடுதல் சேமிப்புக் கிடங்குகள் கட்டமைக்கும் பணியில் ஈடுபட்டிருப்பதாகவும், செறிவூட்டப்பட்ட அரிசி என்பது வழக்கமாக வழங்கப்படும் அரிசியில் இருந்து முற்றிலும் வேறுபட்டது. இதில் இரும்பு, ஃபோலிக் அமிலம் மற்றும் விட்டமின் பி12 போன்ற நுண்ணூட்ட சத்துக்களை கொண்டு ஊட்டச்சத்து நிறைந்த அரிசியாக தயாரிக்கப்படுகிறது எனவும் தெரிவித்தார்.

செறிவுட்டப்பட்ட அரிசியை ஒன்றிய அரசின் வழிகாட்டுதலின்படி தமிழ்நாடு அரசு உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறை சார்பில்  ஓராண்டு கால சோதனைக்கு, முதற்கட்டமாக திருச்சியில் பொதுமக்களுக்கு நியாய விலை கடைகளில் சாதாரண அரிசிக்கு பதிலாக வழங்கப்பட்டதாகவும் தெராவித்தார்.

தொடர்ந்து பேசிய அவர், கடந்தகாலத்தை விட ரேஷன் அரிசி கடத்தப்படுவது குறைந்திருப்பதாகவும், மேலும் நேர்த்தியான முறையில் அரிசி கடத்தலை தவிர்க்கும் நடவடிக்கைகளை எடுத்து வருவதாகவும் தெரிவித்தார். மேலும் உதநிதி அமைச்சரானது குறித்த செய்தியாளர்களின் கேள்விக்கு  பதிலளித்த அமைச்சர் உதயநிதி, விளையாட்டு மற்றும் இளைஞர் நலத்துறை அமைச்சராக பணியேற்றதில் மூத்த தலைவர்களுக்கும் கட்சியின் அனைத்து நிர்வாகிகளுக்கும் பெரும் மகிழ்ச்சியே என்று தெரிவித்தார்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com