“மகளிர் சுய உதவி குழுக்களின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும்...” - அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்

“மகளிர் சுய உதவி குழுக்களின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும்...” - அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்
Published on
Updated on
1 min read

சென்னை, நுங்கம்பாக்கம் அன்னை தெரசா மகளிர் வளாகத்தில் மகளிர் மேம்பாட்டு நிறுவனத்தின் செயல்பாடுகள் குறித்த ஆய்வுக்கூட்டம்  இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் நடைப்பெற்றது.

இந்த ஆய்வுக் கூட்டத்தில் மகளிர் சுய உதவி குழுக்களுக்கு வழங்கப்படும் வங்கி கடன் இணைப்புகள், சுழல் நிதி, இளைஞர்களுக்கான திறன் வளர்ப்பு பயிற்சிகள், முதலமைச்சரின் காலை உணவு திட்டம், மக்களை தேடி மருத்துவம் மற்றும் இல்லம் தேடி கல்வி ஆகிய திட்டங்களில் சுய உதவி குழு மகளிரின் பங்களிப்பு, மக்கள் நல திட்டங்கள் செயல்படுத்திட மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும், அடைய வேண்டிய இலக்குகள் குறித்தும் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆய்வு மேற்கொண்டார்.
 
மேலும், அதிக எண்ணிக்கையில் சுய உதவி குழுக்களை உருவாக்கி, அரசின் திட்டங்கள் முழுவதும் மாநிலத்தின் கடைக்கோடியில் உள்ள கிராமத்தில் செயல்படும் சுய உதவி குழுக்களையும் சென்றடையும் வண்ணம் செயல்பட வேண்டும் என்றும், சுய உதவி குழுக்களுக்கு வங்கி கடன் இணைப்பாக 25000 கோடி வழங்கப்பட நிர்ணயிக்கப்பட்ட இலக்கினை விரைந்து அடைந்திட வேண்டும் என்றும் ,சுய உதவி குழுக்களுக்கு வங்கி கடன் இணைப்பு பெற்று தரும் நடவடிக்கையில் அதிக முனைப்புடன் செயல்பட வேண்டும் எனவும், அமைச்சர் அதிகாரிகளுக்கு ஆலோசனைகளை வழங்கினார்.

இந்த ஆய்வுக்கூட்டத்தில், ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சி துறை செயலாளர் அமுதா, தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனத்தின் மேலாண்மை இயக்குனர் பிரியதர்ஷினி மற்றும் அரசு உயர் அதிகாரிகள் கலந்துக் கொண்டனர்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com