தமிழக தலைமை தகவல் ஆணையர் யார்? முதலமைச்சர் ஆலோசனை!

தமிழக தலைமை தகவல் ஆணையர் யார்? முதலமைச்சர் ஆலோசனை!

தமிழக தலைமை தகவல் ஆணையர் யார் என்பதை தேர்வு செய்வதற்கான ஆலோசனை கூட்டம், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்றது.

தமிழ்நாட்டில் தலைமை தகவல் ஆணையர் மற்றும் நான்கு தகவல் ஆணையர்களின் பதவியிடங்கள் காலியாக உள்ளது. எனவே, காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்காக, இந்த குழுவின் தலைவராக ஓய்வுபெற்ற நீதிபதி அக்பர் அலி நியமிக்கப்பட்டார். அதன்படி, தகவல் ஆணையர்கள் பதவிக்கு விண்ணப்பித்தவர்களில் தகுதிவாய்ந்த நபர்களின் பட்டியலை தயார் செய்து குழுவின் தலைவர் அக்பர் அலி முதலமைச்சரிடம் வழங்கியுள்ளார்.

இதையும் படிக்க : 22 மாதங்களில் கொள்ளையடித்த பணத்தால் கிடைத்த போலியான வெற்றி - ஜெயக்குமார் பேட்டி!

இந்நிலையில், தகவல் ஆணையர்களை தேர்வு செய்வதற்கான ஆலோசனைக் கூட்டம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் சென்னை தலைமை செயலகத்தில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் தலைமை தகவல் ஆணையர் மற்றும் நான்கு தகவல் ஆணையர்களின் பதவிக்கு தேர்வு செய்யப்பட்ட பெயர்கள் ஆளுநரின் ஒப்புதலை பெற்று அரசிதழில் வெளியிடப்படும் என்று கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இதற்கிடையில், தமிழக அரசின் தலைமைச் செயலாளராக உள்ள இறையன்புவின் பதவிக்காலம் நிறைவடைய உள்ள நிலையில், அவரும் தலைமை தகவல் ஆணையர் பதவிக்கு விண்ணப்பித்துள்ளது குறிப்பிடத்தக்கது.