22 மாதங்களில் கொள்ளையடித்த பணத்தால் கிடைத்த போலியான வெற்றி - ஜெயக்குமார் பேட்டி!

22 மாதங்களில் கொள்ளையடித்த பணத்தால் கிடைத்த போலியான வெற்றி - ஜெயக்குமார் பேட்டி!
Published on
Updated on
1 min read

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலை பொருத்தவரை தங்களுக்கு தோல்விகரமான வெற்றி தான் என்று  அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் ஆளும் கட்சியான திமுக கூட்டணி காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவன் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். அதேசமயம், எதிர்க்கட்சியான அதிமுக பாதிக்கு பாதி வாக்குகள் பெற்று இரண்டாம் இடத்தில் இருந்தும் படுதோல்வியையே பெற்றுள்ளனர்.

இந்நிலையில் சென்னை கோடம்பாக்கத்தில் செய்தியாளர்களை சந்தித்த அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயகுமார், ஆட்சி அமைத்து 22 மாதங்களில் கொள்ளையடித்த பணத்தை ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் திமுக செலவு செய்து வெற்றி பெற்றதாக சாடினார். 400 கோடி ரூபாய் வரையில் செலவழித்து கிடைத்த ஒரு போலியான வெற்றி என்று குறிப்பிட்ட அவர், இந்த வெற்றி  ஸ்டாலினுக்கு  ஏமாற்றமே என்றும் கூறினார்.

தமிழகத்தில்  ஜனநாயகம் கேலிக்கூத்தாக இருக்கிறது என குறிப்பிட்ட ஜெயக்குமார், நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக மிகப்பெரிய  வெற்றி பெறும் என தெரிவித்தார்.  

logo
Malaimurasu Seithigal
www.malaimurasu.com