பேனா நினைவுச்சின்னம்...பொதுமக்கள் கருத்துக் கேட்பு கூட்டம்...!

பேனா நினைவுச்சின்னம்...பொதுமக்கள் கருத்துக் கேட்பு கூட்டம்...!

மறைந்த முன்னாள் முதலமைச்சர் கலைஞர் கருணாநிதியின் நினைவு சின்னம் தொடர்பாக கருத்து கேட்பு கூட்டம் இன்று நடைபெறவுள்ளது.

நினைவு சின்னம் :

மறைந்த முன்னாள் முதலமைச்சர் கலைஞர் கருணாநிதியின் நினைவிடத்தில் இருந்து 320 மீட்டர்தொலைவில் உள்ள மெரினா  கடற்கரையில் நினைவுசின்னமாக அவர் எழுத்து துறைக்கு ஆற்றிய பங்களிப்பை சிறப்பிக்கும் வகையில் பேனா ஒன்றை நிறுவுவதாக தமிழக அரசு அறிவித்திருந்தது. அதற்காக ரூ.81 கோடி நிதியையும் ஒதுக்கி தமிழக அரசு அறிவித்தது. தமிழ்நாடு அரசின் பொதுப்பணித்துறை இந்த நினைவுச் சின்னத்தை அமைக்க நடவடிக்கை எடுத்து வருகிறது.

இதையும் படிக்க : நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று தொடக்கம்!

கருத்து கேட்பு கூட்டம் :

அதன் முதற்கட்டமாக, கடலோர ஒழுங்குமுறை மண்டல விதிப்படி, மாவட்ட கடலோர மண்டல மேலாண்மை ஆணையத்திடம் அனுமதி பெறுவதற்காக தமிழ்நாடு அரசு பொதுப்பணித்துறை விண்ணப்பித்திருந்த விண்ணப்பமானது, தற்போது தேசிய கடலோர மண்டல மேலாண்மை ஆணையத்திடம் உள்ளது. அவர்களின் விதிகளின்படி கடலுக்குள் கருணாநிதியின் பேனா நினைவுச் சின்னம் அமைப்பது தொடர்பாக பொதுமக்களின் கருத்து கேட்பு கூட்டம் நடத்தப்பட வேண்டும். அதன்படி தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் சார்பில் சென்னை கலைவாணர் அரங்கில் பொதுமக்கள் கருத்து கேட்புக் கூட்டம் இன்று நடைபெறவுலள்ளது. இந்த கூட்டத்தில் தங்கள் கருத்துக்களை தெரிவிப்பதற்காக பொதுமக்கள் வந்த வண்ணம் உள்ளனர்.

முன்னதாக, இந்த கூட்டத்திற்கு நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமார் கலந்து கொள்ள இருப்பதாக தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.