நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று தொடக்கம்!

பரபரப்பான அரசியல் சூழ்நிலையில், குடியரசு தலைவர் திரெளபதி முர்மு உரையுடன் நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று தொடங்குகிறது.

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று தொடக்கம்!

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரின் முதல் அமர்வு இன்று தொடங்கி பிப்ரவரி 14ம் தேதி வரை நடைபெற உள்ளது. வரும் பிப்ரவரி 1-ம் தேதி மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ள நிலையில், இன்று அவையின் தொடக்க நாளில், இரு அவைகளின் கூட்டத்தில் குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு உரையாற்றுகிறார்.

அவரது உரையைத் தொடர்ந்து, நாளை பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல் செய்யப்பட உள்ளது. இதனை மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்கிறார்.

பொருளாதார ஆய்வறிக்கையில் நாட்டின் பொருளாதார நிலை, தேவைப்படும் சீர்திருத்த நடவடிக்கைகள், பொருளாதார சவால்கள் மற்றும் அதனை எதிர்கொள்ள தேவையான நடவடிக்கைகள் குறித்த தகவல்கள் இடம்பெற்றிருக்கும் என தகவல் வெளியாகியுள்ளது.

மேலும் படிக்க | 2023-24 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட் ஒதுக்க திட்டம்... எதிர்க்கட்சி தலைவர் சொன்ன தகவல்!