திட்டங்களின் நிலை குறித்து இறையன்பு ஆலோசனை...!

திட்டங்களின் நிலை குறித்து இறையன்பு ஆலோசனை...!

அரசால் அறிவிக்கப்பட்ட திட்டங்களின் நிலை, துறை வாரியாக செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்கள் குறித்து அனைத்துத்துறை செயலாளர்களுடன் தலைமைச் செயலாளர் இறையன்பு இன்று ஆலோசனை மேற்கொள்ள உள்ளார்.

இன்று ஆலோசனை:

தமிழக சட்டப்பேரவையில், பல்வேறு துறை சார்ந்த அறிவிப்புகள் வெளியிடப்பட்டு படிப்படியாக நிறைவேற்றப்பட்டு வருகின்றன. இந்நிலையில், தமிழ்நாடு அரசால் அறிவிக்கப்பட்ட திட்டங்கள் குறித்தும், துறை வாரியாக செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்கள் குறித்தும், முதலமைச்சரின் அறிவிப்புகள் குறித்தும் அனைத்து துறை செயலாளர்களுடன் தலைமை செயலாளர் இறையன்பு சென்னை தலைமை செயலகத்தில் இன்று ஆலோசனை மேற்கொள்ளவுள்ளார்.

இதையும் படிக்க: ஒரே நாளில் 19 லட்சம் பேர் விண்ணப்பம்...மின்சார வாரியம் தகவல்!

அறிவுரைகள் வழங்க இருப்பதாக தகவல்:

இந்த கூட்டத்தில் முக்கிய திட்டங்களுக்கு முன்னுரிமை அளித்து செயல்படுத்த வேண்டும், திட்டங்கள் முறையாக மக்களுக்கு சென்றடைவதை கண்காணிக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு அறிவுரைகள் வழங்கப்பட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.