ஒரே நாளில் 19 லட்சம் பேர் விண்ணப்பம்...மின்சார வாரியம் தகவல்!

ஒரே நாளில் 19 லட்சம் பேர் விண்ணப்பம்...மின்சார வாரியம் தகவல்!

மின் இணைப்பை ஆதார் எண்ணுடன் இணைப்பதற்கு இதுவரை 19 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளதாக மின்சார வாரியம் தகவல் தெரிவித்துள்ளது.

ஆதார் எண்ணை இணைக்க வேண்டும்:

தமிழகத்தில் மின் இணைப்பு என்னுடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என்று தமிழக அரசு சார்பில் மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி வலியுறுத்தியிருந்தார். தற்போது அதற்கான பணிகள் வேகமாக நடைபெற்று வருகிறது.

இதனிடையே, பொதுமக்கள் எளிதில் இந்த பணிகளை மேற்கொள்ள மின்சார வாரியம் தமிழக முழுவதிலும் உள்ள 2811 பிரிவு அலுவலகங்களிலும் சிறப்பு முகாம்களை அறிவித்தது. அதன்படி, நேற்று முதல் இந்த சிறப்பு முகாம்களில் ஆதார் எண்களை இணைக்கக்கூடிய பணிகளை பொதுமக்கள் மேற்கொண்டு வருகின்றனர்.

இதையும் படிக்க: டீ விற்றவன் கையில் நாடு..! அனல் பறக்கும் இறுதிகட்ட குஜராத் தேர்தல் பிரச்சாரம்..!

ஒரே நாளில் இவ்வளவு இணைப்புகளா?:

இந்த சிறப்பு முகாம் அறிவிக்கப்பட்ட நேற்று ஒரே நாளில் மட்டும் 5 லட்சம் மின் இணைப்புகள் ஆதார் எண்ணுடன் இணைக்கப்பட்டிருப்பதாக மின்சார வாரியம் தகவல் தெரிவித்துள்ளது. அதேபோன்று, மின்வாரிய இணையதளத்தை பயன்படுத்தி இதுவரை 15 லட்சத்து 90 ஆயிரம் இணைப்புகளும், மின் கட்டண வசூல் மையங்கள் மூலம் மூன்று லட்சத்து 32 ஆயிரம் இணைப்புகளும் இணைக்கப்பட்டிருப்பதாக மின்சார வாரியம் தெரிவித்துள்ளது. இதன் மூலம், இதுவரை 19 லட்சத்து 23 ஆயிரத்து 688 மின் இணைப்புகள் ஆதார் எண்ணுடன் இணைக்கப்பட்டிருப்பதாக மின்சார வாரியம் தகவல் தெரிவித்துள்ளது.

மேலும், மின்சார வாரியம் அறிவித்துள்ள சிறப்பு முகாம்கள் டிசம்பர் 31ஆம் தேதி வரை நடைபெற உள்ள நிலையில், பொதுமக்கள் விரைவாக தங்கள் மின் இணைப்புகளை ஆதார் எண்ணுடன் இணைத்துக் கொள்ள வேண்டும் என்று மின்சார வாரியம் வலியுறுத்தியுள்ளது.