"பொதுத்தேர்வைக் கண்டு அச்சப்பட வேண்டாம்" - +2 மாணவ - மாணவியருக்கு முதலமைச்சர் வாழ்த்து!

"பொதுத்தேர்வைக் கண்டு அச்சப்பட வேண்டாம்" - +2 மாணவ - மாணவியருக்கு முதலமைச்சர் வாழ்த்து!

பொதுத் தேர்வைக் கண்டு அச்சப்பட வேண்டாம் என்று பொதுத் தேர்வு எழுதவுள்ள மாணவர்களுக்கு முதலமைச்சர் மு க ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார்.

நாளை 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு தொடங்கவுள்ள நிலையில், 10, 11, 12ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதவுள்ள மாணவர்களுக்கு வாழ்த்து தெரிவித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

இதையும் படிக்க : 6-வது முறையாக கர்நாடகா செல்லும் பிரதமர் மோடி...ரூ.16 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்புள்ள திட்டங்கள் திறப்பு!

அவர் வெளியிட்டுள்ள காணொளியில், பொதுத் தேர்வு எழுதவுள்ள மாணவர்களுக்கு தேவை தன்னம்பிக்கையும் மன உறுதியும் தான் என்றும், எந்தவித தயக்கமும் இல்லாமல் தேர்வு எழுதுமாறும் ஊக்கமளித்துள்ளார்.

மேலும் நீங்கள் படிக்கும் புத்தகத்திலிருந்து தான் கேள்வி வரப்போகிறது. அதனால் உங்களுக்கு தன்னம்பிக்கை இருந்தாலே போதும், அத்லே நீங்கள் பாதி வெற்றி பெற்றதற்கு சமம், எனவே தேர்வை கண்டு பயம் கொள்ளாமல், விடைகளை தெளிவாக எழுதி வெற்றி பெற வேண்டும் என்று மாணவ மாணவியருக்கு வாழ்த்தி தெரிவித்துள்ளார்.