6-வது முறையாக கர்நாடகா செல்லும் பிரதமர் மோடி...ரூ.16 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்புள்ள திட்டங்கள் திறப்பு!

6-வது முறையாக கர்நாடகா செல்லும் பிரதமர் மோடி...ரூ.16 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்புள்ள திட்டங்கள் திறப்பு!

பெங்களூரு மைசூரு இடையேயான 10 வழிச்சாலையை பிரதமர் மோடி இன்று திறந்து வைத்து நாட்டுக்கு அர்ப்பணிக்கிறார். 

கர்நாடக சட்டசபைத் தேர்தல் ஏப்ரல் அல்லது மே மாதத்தில் நடத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில், கர்நாடக மாநிலத்தில் பல்வேறு நலத்திட்டங்களைத் தொடங்கி வைப்பதில் மத்திய பாஜக அரசு மும்முரமாகச் செயல்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக 6-வது முறையாக  இன்று கர்நாடகா செல்லும் பிரதமர் நரேந்திர மோடி, அங்கு 16 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்புள்ள நலத் திட்டங்களைத் தொடங்கி வைக்கிறார். அதற்காக கர்நாடகா வரும் பிரதமர், மண்டியா மாவட்டம் தார்வாரில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள நிகழ்ச்சியில் பங்கேற்கிறார். 

இதையும் படிக்க : ஆளுநருக்கு எதிராக பேனர்...அகற்றக்கோரியதால் இருதரப்பினரிடையே தள்ளு முள்ளு...!

அங்கு, 8 ஆயிரம் கோடி ரூபாய் செலவில் பெங்களூரு - மைசூரு இடையே 10 வழி விரைவுச்சாலையைத் திறந்து வைத்து நாட்டுக்கு அர்ப்பணிக்க உள்ளார். இதன் மூலம் மைசூருக்கு 75 நிமிடங்களில் சென்றடைய முடியும் என்று கூறப்படுகிறது. இதையடுத்து, மைசூரு-குசால்நகர் இடையே 4 வழிச்சாலை திட்டத்திற்கு அடிக்கல் நாட்டுகிறார். அங்கு நடைபெறும் விழாவில் தார்வார் ஐ.ஐ.டி. நிறுவன கட்டிடத்தை நாட்டுக்கு அர்ப்பணிக்கிறார். இதற்கான அடிக்கல்லை மோடி கடந்த 2019-ம் ஆண்டு நாட்டினார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், பல்வேறு நலத்திட்டங்களை பிரதமர் திறந்து வைக்க உள்ளதால் அப்பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.