அடுத்த 24 மணி நேரத்திற்குள் வங்க கடலில் உருவாக வாய்ப்பு...வானிலை மையம் கொடுத்த அப்டேட்!

அடுத்த 24 மணி நேரத்திற்குள்  வங்க கடலில் உருவாக வாய்ப்பு...வானிலை மையம் கொடுத்த அப்டேட்!

தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்காலில் இன்று முதல் 8-ம் தேதி வரை லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

வடகிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் ஒரு காற்று சுழற்சி நிலவி வருவதன் காரணமாக, அடுத்த 24 மணி நேரத்தில் வடமேற்கு மற்றும் அதை ஒட்டிய மத்திய மேற்கு வங்கக் கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது.

இதையும் படிக்க : போதை ஆசாமியை தட்டிக்கேட்டதால் அரிவாள் வெட்டு...ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் உயிரிழப்பு!

இதன் காரணமாக தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்கால் மற்றும் கடலோர ஆந்திரா கேரளா உள்ளிட்ட பகுதிகளில் இன்று முதல் 8 ஆம் தேதி வரை லேசானது முதல் மிதமான மழை பெய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.