போதை ஆசாமியை தட்டிக்கேட்டதால் அரிவாள் வெட்டு...ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் உயிரிழப்பு!

போதை ஆசாமியை தட்டிக்கேட்டதால் அரிவாள் வெட்டு...ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் உயிரிழப்பு!

திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே மது அருந்துவதை தட்டிக்கேட்ட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருப்பூர் கள்ளகிணறு பகுதியை சோ்ந்த மோகன் என்பவர் தனது குடும்பத்தினருடன் புஷ்பவதி, ரத்தினாம்பாள் மற்றும் செந்தில் ஆகியோா் வீட்டில் அமா்ந்து பேசிக்கொண்டிருந்தார். அப்போது வீட்டின் அருகே மா்ம நபா்கள் சிலா் மது அருந்திக்கொண்டிருந்ததால், மோகன் உள்ளிட்ட 4 பேரும் தட்டிக்கேட்டுள்ளனா். அப்போது அவா்களுக்குள் தகராறு ஏற்பட்டுள்ளது. 

இதில் ஆத்திரமடைந்த போதை ஆசாமிகள் கையில் வைத்திருந்த அாிவாளால் மோகன் உள்ளிட்ட 4 பேரையும் சரமாாியாக வெட்டியுள்ளனா். இதில் மோகன், புஷ்பவதி, ரத்தினாம்பாள் ஆகியோா் பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே பாிதாபமாக உயிாிழந்தனா். செந்தில் படுகாயத்துடன் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தாா். 

இதையும் படிக்க : இன்பநிதி பெயரில் பாசறை...சஸ்பென்ட் செய்யப்பட்ட திமுக நிர்வாகிகள்...!

இந்த சம்பவம் குறித்து தகவலறிந்த துணை காவல் கண்காணிப்பாளா் சவுமியா தலைமையில் போலீசாா் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, செந்திலை மீட்டு சிகிச்சைக்காக பல்லடம் அரசு மருத்துவமனைக்கும், மற்ற 3 போின் உடல்களை கைப்பற்றி பிரேத பாிசோதனைக்காகவும் அனுப்பி வைத்தனா். இருப்பினும், செந்தில் சிகிச்சை பலனின்றி பாிதாபமாக உயிாிழந்தாா்.

இதனையடுத்து கொலை நடந்த இடத்தில் ஏராளமான போலீசாா் குவிக்கப்பட்டுள்ளனா். மேலும் சம்பவம் குறித்து போலீசாா் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனா்.