

பொது பட்ஜெட் மற்றும் வேளாண் பட்ஜெட் குறித்த ஆலோசனை மேற்கொள்ள இன்று அமைச்சரவை கூட்டம் நடைபெறுகிறது.
சென்னை தலைமை செயலகத்தில் முதலமைச்சர் தலைமையில் இன்று மாலை 5 அளவில் நடைபெறும் அமைச்சரவை கூட்டத்தில் அனைத்து அமைச்சர்களும் கலந்து கொள்கின்றனர்.
இந்த அமைச்சரவை கூட்டத்தில், 2023-24 நிதி ஆண்டுக்கான பட்ஜெட் அறிவுப்புகளில் இடம்பெற உள்ள திட்டங்கள் குறித்து ஆலோசனை நடத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுதவிர, ஆன்லைன் சூதாட்ட தடை மசோதாவை ஆளுநர் திருப்பி அனுப்பியது குறித்து மேற்கொள்ள வேண்டிய அடுத்தக்கட்ட நடவடிக்கை தொடர்பாகவும் முக்கிய ஆலோசனை மேற்கொள்ளப்படும் என்றும், மகளிருக்கு 1000 ரூபாய் உரிமைத் தொகை உள்ளிட்டவை குறித்து ஆலோசிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.