ஆளுநருக்கு வாய்தான் உண்டு;காதுகள் கிடையாது...உங்களில் ஒருவன் பதில்கள்!

ஆளுநருக்கு வாய்தான் உண்டு;காதுகள் கிடையாது...உங்களில் ஒருவன் பதில்கள்!
Published on
Updated on
1 min read

ஆளுநருக்கு வாய்தான் உண்டு காதுகள் கிடையாது என உங்களில் ஒருவன் பதில்கள் நிகழ்ச்சியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விமர்சித்துள்ளார்.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உங்களில் ஒருவன் பதில்கள் தொடரில் பங்கேற்று கேள்விகளுக்கு பதில் அளித்தார். அப்போது ஆளுநரின் அரசியலில் தலையிடக் கூடாது என்ற உச்சநீதிமன்ற கருத்து குறித்து கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு பதலளித்த முதலமைச்சர் ஆளுநருக்கு வாய்தான் உண்டு காதுகள் கிடையாது என்று விமர்சனம் செய்தார்.

மேலும், டெல்லி துணை முதலமைச்சர் மணீஷ் சிசோடியா கைது கண்டிக்கத்தக்கது என்றும், எதிர்க்கட்சிகளை தேர்தல் மூலமாக வெல்லலாமே தவிர விசாரணை ஆணையங்கள் மூலமாக வெல்ல நினைக்க கூடாது எனவும் தெரிவித்துள்ளார். 

தொடர்ந்து, இந்தியாவை வளர்த்துள்ளோம்,  வளர்த்துள்ளோம் என்று பா.ஜ.க  சொல்வது, 2014-ஆம் ஆண்டில் பாஜக ஆட்சிக்கு வரும்போது, ஒரு சிலிண்டரின் விலை 414 ரூபாய் என்றும், தற்போது ஒரு சிலிண்டரின் விலை ஆயிரத்து 118 ரூபாய் 50 பைசாவாக மாறியிருப்பதும், பாஜக ஆட்சிக்கு வரும்போது மத்திய அரசுக்கு இருந்த கடன் 54 லட்சம் கோடி ரூபாய் என்றும், ஆனால், தற்போது 147 லட்சம் கோடி ரூபாய் கடன் இருப்பதே பாஜகவால் இந்தியா அடைந்த வளர்ச்சி என்றும் குறிப்பிட்டுள்ளார்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com