கள்ளக்குறிச்சி மாணவியின் தாயார் திடீரென்று டி.ஜி.பியிடம் அளித்த மனு!

கள்ளக்குறிச்சி மாணவியின் தாயார் திடீரென்று டி.ஜி.பியிடம் அளித்த மனு!

மாணவி ஸ்ரீமதியின் மரணத்தில் உள்ள மர்மங்களை விளக்க, சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் எனக் கூறி, மாணவியின் தாயார் செல்வி, டிஜிபி சைலேந்திர பாபுவிடம் மனு அளித்துள்ளார்.

மாணவியின் தாயார் புகார் மனு:

சென்னை காவல்துறை இயக்குனர் அலுவலகத்தில், டி.ஜி.பி. சைலேந்திர பாபுவை நேரில் சந்தித்து புகார் மனு அளித்த செல்வி, அதன்பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்தார்.

இதையும் படிக்க: சசிகலாவின் ”ஒற்றுமை”...எஸ்கேப் ஆன முன்னாள் அமைச்சர்...செய்தியாளர்களிடம் கூறிய 3 வார்த்தை...!

அப்போது பேசிய அவர், தனது மகள் ஸ்ரீமதியின் மரணத்தில் உள்ள மர்மங்களை விளக்க, சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் எனக் கேட்டுக் கொண்டார். மேலும், ஸ்ரீமதி பற்றிய தவறான தகவல்களை சமூக வலைத்தளத்தில் பரப்பி வருபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், அவதூறு பரப்பும் யூடியூப் சேனல்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டார்.

நீதிமன்றத்தினுடைய தீர்ப்பை ஏற்றுக்கொள்ள முடியவில்லை எனக் கூறிய அவர், மேல்முறையீடு செய்ய உள்ளதாகவும் தெரிவித்தார்.