முதலமைச்சாின் காலை உணவுத் திட்டம் வரும் 25-ம் தேதி முதல் அனைத்து தொடக்கப்பள்ளிகளிலும் விாிவுப்படுத்தப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தமிழ்நாடு அரசின் நிதிநிலை அறிக்கையில், மாணவர்களின் வருகை மற்றும் செயல்திறனானது இந்த திட்டத்தின் மூலம் அதிகரித்துள்ளதால் அனைத்துப் பள்ளிகளுக்கும் விரிவுபடுத்தப்படும் என அறிவிப்பு வெளியிடப்பட்டது.
இதையும் படிக்க : ராகுலை கண்டு பாஜக பயப்படுகிறதா? - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
அதன்படி, தற்போது இத்திட்டம் ஆயிரத்து 978 பள்ளிகளில் செயல்படுத்தப்படுகிறது. எனவே, இத்திட்டத்தை தமிழ்நாட்டில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் செயல்படுத்தினால், மொத்தம் உள்ள 31,008 பள்ளிகளில் 1 முதல் 5 ஆம் வகுப்பு வரை படிக்கும் 15,75,900 மாணவர்கள் பயனடைவார்கள் என்றும், ரூ. 404 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதோடு, இத்திட்டத்தின் கீழ் பயனடையும் ஒவ்வொரு குழந்தைக்கும் தினமும் ரூ.12.71 செலவாகும் எனவும் கணிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் முதலமைச்சரின் காலை உணவு திட்டத்தை அனைத்து தொடக்கப்பள்ளியிலும் விாிவுப்படுத்துவதற்கான ஏற்பாடுகள் முழு வீச்சில் நடைபெற்று வருவதோடு, வரும் ஆகஸ்ட் 25ஆம் தேதி இத்திட்டத்தை நாகப்பட்டினம் மாவட்டத்தில் தொடங்குவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது