ராகுலை கண்டு பாஜக பயப்படுகிறதா? - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

ராகுலை கண்டு பாஜக பயப்படுகிறதா? - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
Published on: 
Updated on: 
1 min read

ராகுல் காந்தியை கண்டு பாஜக பயப்படுகிறதா என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.

ராகுல் காந்தி மீதான அவதூறு வழக்கில் அவருக்கு விதிக்கப்பட்ட 2 ஆண்டுகள் சிறை தண்டனைக்கு உச்ச நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டது. இதை தொடர்ந்து ராகுல் காந்தியை மீண்டும் நாடாளுமன்ற உறுப்பினராக நியமிக்க வேண்டும் என்ற கோரிக்கை காங்கிரஸ் தரப்பில் வைக்கப்படுகிறது. அத்துடன் இன்று நாடாளுமன்றத்திலும் இந்த கோரிக்கையை காங்கிரஸ் எழுப்பும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

இந்நிலையில் இதுகுறித்து தனது ட்விட்டரில் பதிவிட்டுள்ள தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ராகுல்காந்தியை எம்.பி. பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்ய காட்டிய அவசரத்தை, திரும்பப் பெறுவதில் ஏன் காட்டவில்லை? ராகுல் மீதான தண்டனைக்கு உச்சநீதிமன்றம் தடை விதித்தும், எம்.பி. பதவி நீக்கத்தை ஏன் திரும்பப் பெறவில்லை எனவும் கேள்வி எழுப்பியுள்ள முதலமைச்சர், எம்.பி. பதவி நீக்கத்தை திரும்ப பெற்றால், ராகுல் மீண்டும் நாடாளுமன்றத்திற்கு வந்துவிடுவார் என அச்சமா? என்றும் வினவியுள்ளார். 

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com