அமித்ஷா பெயரை அவைக்குறிப்பில் இருந்து நீக்க வலியுறுத்தி பா.ஜ.க. உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்.
இரண்டு தினங்களுக்கு முன்பு விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசும் போது, ஐ.பி.எல். நடத்துவதே, மத்திய அமைச்சர் அமித்ஷாவின் மகன்தான் என குறிப்பிட்டிருந்தார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்த பா.ஜ.க. உறுப்பினர்கள் அமித்ஷா பெயரை அவைக் குறிப்பில் இருந்து நீக்க வேண்டும் என்று வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினர்.
இதையும் படிக்க : முன்னுரிமை அடிப்படையில் உயர்மட்ட பாலம் - அமைச்சர் எ.வ.வேலு!
இதற்கு பதில் அளித்து பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், மரியாதை குறைவாக அமித்ஷாவின் பெயர் குறிப்பிடப்படவில்லை என்றும், தவறான வார்த்தைகள் அதில் இடம் பெறவில்லை, எதற்கு அவை குறிப்பில் இருந்து நீக்க வேண்டும் என்றும், மத்திய அமைச்சரின் பெயர் என்ன தகாத வார்த்தையா என்றும் கேள்வி எழுப்பினார். இதனால் அவையில் காரசார விவாதம் ஏற்பட்டது. பின்னர் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, பா.ஜ.க. உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்.