திமுகவிற்கு பயப்படும் பாஜக..... இடைத்தேர்தலில் போட்டியில்லை!!!

திமுகவிற்கு பயப்படும் பாஜக..... இடைத்தேர்தலில் போட்டியில்லை!!!

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் பாஜக போட்டியிட போவதில்லை என்பதை தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை  மறைமுகமாக தெரிவித்துள்ளார்

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக கூட்டணியில் உள்ள பாஜக சார்பில் வேட்பாளர்கள் நிறுத்தப்படுவார்கள் என தகவல் வெளியாகி வந்தது.  தமிழ்நாட்டில் தங்களது பலத்தை தெரிந்து கொள்ள பாஜக போட்டியிடும் என கூறப்பட்டது.  இந்நிலையில் இடைத்தேர்தலில் போட்டியிட்டு தங்களது பலத்தை காட்ட வேண்டிய அவசியமில்லை என தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.  

நெல்லையில் செய்தியாளர்களிடம் இதனை தெரிவித்த அவர், திமுக வேட்பாளரை எதிர்த்து வெற்றி பெற வேண்டும் என்பதே எங்களின் நோக்கம் என்றார்.  பாஜக கூட்டணியில் அதிமுக மிகப்பெரிய கட்சி என குறிப்பிட்ட அண்ணாமலை, தோல்வி பயத்தால் திமுக அமைச்சர்கள் முன்கூட்டியே பிரச்சாரத்தை தொடங்கி உள்ளதாகவும்  விமர்சித்துள்ளார்.  

-நப்பசலையார்

இதையும் படிக்க:    இந்தியாவில் முதல்முறையாக சென்னையில்.....