தேனியில் பரபரப்பு: மது குடிக்கச்சென்ற இடத்தில் இரு தரப்பினருக்கிடையே நடந்த மோதல்..!

தேனியில் பரபரப்பு:  மது குடிக்கச்சென்ற இடத்தில்  இரு தரப்பினருக்கிடையே நடந்த மோதல்..!

தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அருகே இரு சமூகத்தினரிடையே  ஏற்பட்ட மோதலில் 9 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.  

தேனி மாவட்டம் கதிர் நரசிங்கபுரம் அம்பேத்கார் காலனி பட்டியலினத்தை  சேர்ந்தவர் மணிபிரகாஷ். இவரும் இவரது நண்பர் ராமதுரையும் நேற்றிரவு கதிர் நரசிங்கபுரம் மயானம் அருகே சென்றபோது ராமதுரை தான்  கொண்டு வந்திருந்த மதுவை குடித்தார்.

அப்போது அங்கு முன்னதாக வந்திருந்து மது குடித்துக் கொண்டிருந்த கொத்தப்பட்டியை சேர்ந்த பிற்பட்ட சமூகத்தை சேர்ந்தவர்கள் காலியான மது பாட்டிலை நடக்கும் சாலையில் போட்டு உடைத்தாகவும் கூறப்படுகிறது.

இதை  மணிபிரகாஷ் தட்டிக் கேட்டபோது அங்கிருந்தவர்களுக்கும்  ராமதுரை மற்றும் மணி பிரகாசுக்கும்  இடையே தகராறு ஏற்பட்டது. இதில் கொத்தப்பட்டியை சேர்ந்தவர்கள் மணிபிரகாசை தாக்கியதில் மணிபிரகாசுக்கு காயம் ஏற்பட்டது.  இதையடுத்து மணிபிரகாஷ் அங்கிருந்து ராஜதாணி காவல் நிலையத்திற்கு சென்று புகார் கொடுக்க சென்றார்.   

அப்போது மணிபிரகாசை தொலைபேசியில் அழைத்த அவரது மனைவி தனது வீட்டிற்கு வந்து அடையாளம் தெரியாத சிலர் தங்களை தாக்கி விட்டு வீட்டில் உள்ள பொருட்களை அடுத்து நொறுக்கிவிட்டு மகள் கனிஷ்காவை தாக்கி சென்றதாகக்  கூறினார்.

இதையடுத்து கனிஷ்கா தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளார்.

இதுகுறித்த மணிபிரகாஷ் அளித்த புகாரின் பெயரில் ராஜதானி காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு மணிபிரகாசையும் அவரது மகளையும்  தாக்கிய  கொத்தப்பட்டி  பிற்பட்ட வகுப்பைச் சேர்ந்த  கனகராஜ் லோகேஷ் கமல் கார்த்திக் முகேஸ் கோபால் அருண்குமார் சூரியபிரகாஷ் பிரதீப் ஆகிய 9  பேர்களை கைது செய்துள்ளனர்

மதுகுடிக்கும் போது ஏற்பட்ட தகராறில்  பட்டியல் இனத்தை சேர்ந்தவர் மீது தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இதையும் படிக்க  | குற்றவியல் சட்டத் திருத்த வரைவு அறிக்கை நிறுத்தி வைப்பு ..!