குற்றவியல் சட்டத் திருத்த வரைவு அறிக்கை நிறுத்தி வைப்பு ..!

குற்றவியல் சட்டத் திருத்த வரைவு அறிக்கை நிறுத்தி வைப்பு ..!
Published on
Updated on
1 min read

குற்றவியல் சட்டத் திருத்த மசோதா மீதான வரைவு அறிக்கையை  உள்துறைக்கான நாடாளுமன்ற நிலைக்குழு நிறுத்தி வைத்துள்ளது.

தெலுங்கானாவில் உள்ள ஹைதராபாத் நகரில் சர்தார் வல்லபாய்  பட்டேல் தேசிய போலீஸ் பயிற்சி பள்ளியில் பயிற்சி முடித்து பணியில் சேரும்  காவல் அதிகாரிகளின் அனிவகுப்பு நடைபெற்றது.   அந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக பங்கேற்ற  மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பேசுகையில்:-  

ஆங்கிலேயர்கள் காலத்தில் இயற்றப்பட்ட மூன்று குற்றவியல் சட்டங்கள் நம் நாட்டின் குற்றவியல் நடைமுறைகளை இயக்கும் சக்தியாக இப்போதும் உள்ளன எனக்குறிப்பிட்ட அவர்,  இந்த  சி.ஆர்.பி.சி , ஐ.பி.சி மற்றும் ஐ.இ.சி., சட்டங்களில் மிகப்ப் பெரிய  மாற்றத்தை மத்திய அரசு கொண்டுவந்துள்ளதாகத் தெரிவித்தார்.

இது தொடர்பாக பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மசோதாக்களை நிலைக்குழு ஆய்வு செய்து வருவதாகவும் விரைவில் இந்த மசோதாக்கள் சட்டங்களாக  நிறைவேறும் எனவும்  தெரிவித்தார்.

பழைய சட்டங்கள் ஆங்கிலேயர்கள் நிர்வாகத்தை பாதுகாக்கவே இருந்ததாகவும், ஆனால், இப்போது வரும் புதிய சட்டங்கள் மக்களின் உரிமைகளை பாதுகாக்கவும், மக்களின் உரிமைகள் அவர்களிடம் கொண்டு சேர்வதை தடுக்கும் சக்திகளை தோற்கடிக்கவே இயற்றப்பட்டதாகவும் தெரிவித்திருந்தார்.

இவ்வாறிருக்க,  நாடாளுமன்ற நிலைக் குழு சட்டத் திருத்த மசோதா குறித்து விரைவாக ஆய்வு செய்ததாகவும் டெல்லியைத் தவிர நாட்டின் பிற பகுதிகளில் உள்ள  நிபுணர்களின் கருத்துகளை கேட்கவில்லை என்று குற்றம் சாட்டி கூடுதல் அவகாசம் கோரி எதிர்கட்சிகள் வேண்டுகோள் விடுத்தன. 

இதையேற்ற நிலைக்குழு அந்த மசோதா குறித்த அறிக்கையை  சமர்ப்பிக்கும் முடிவை நிறுத்தி வைத்துள்ளது.

logo
Malaimurasu Seithigal
www.malaimurasu.com