இந்திய பல்கலைக்கழங்கள் காரத்தே - தமிழனா என கேட்டு தாக்குதல் - அரசு நடவடிக்கை எடுக்குமா அரசு?

இந்திய பல்கலைக்கழங்கள் காரத்தே - தமிழனா என கேட்டு தாக்குதல் - அரசு நடவடிக்கை எடுக்குமா அரசு?
Published on
Updated on
1 min read

தமிழனா நீ என கேட்டு தாக்குதல் 

இந்திய  பல்கலைக்கழகங்கள் இடையே நடைபெற்ற கராத்தே தொடரில் தாக்கப்பட்ட தமிழக வீராங்கனை மற்றும் பயிற்சியாளர். தமிழனா நீ என கேட்டு தாக்குவதாக குற்றச்சாட்டினர்.பத்திரமாக மீட்டு தமிழ்நாட்டுக்கு கொண்டு வர தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

இந்திய அளவிலான அனைத்து பல்கலைக்கழகங்கள் இடையேயான கராத்தே போட்டிகள் சத்தீஸ்கர் மாநிலம் பிலாஸ்பூர் எனும் பகுதியில் நடைபெற்று வருகிறது.

இதில் நாடு முழுவதும் இருந்து பல்வேறு மாநிலங்களை சேர்ந்த வீரர் வேளாங்கண்ணிகள் பங்கேற்று உள்ளனர் தமிழகத்தின் சார்பில் சவிதா பல்கலைக்கழகத்தை சேர்ந்த 3 மாணவிகள் இப்போட்டியில் கலந்து கொண்டுள்ளனர்

தமிழகத்தை சேர்ந்த அபிநயா

போட்டியில் இந்திய அளவில் பல பதக்கங்களை வென்று தமிழகத்தை சேர்ந்த அபிநயா கலந்து கொண்டுள்ளார்.இந்த போட்டியிலும் சிறப்பாக விளையாடி இறுதி போட்டிக்கு செல்லும்  நிலையில் தமிழக வீராங்கனை என்பதால் திட்டமிட்டு வட மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் அவரை இறுதிப் போட்டிக்கு செல்லாதபடி பாயிண்டுகளை குறைத்து தோல்வியடைந்ததாக அறிவித்த தாக குற்றச்சாட்டு வைத்திருக்கிறார் வீராங்கனை அபிநயா.இது குறித்த தங்கள் அதிருப்தியை வெளிப்படுத்திய வீராங்கனை மற்றும் ஆபாசமான வார்த்தைகளால் திட்டியும் அங்கிருக்கும் அனைவரும் சேர்ந்து திட்டியும் உள்ளனர் மேலும் "தமிழ் வாலா"(தமிழனா) வா நீ என்று கேட்டு மோசமாக நடந்துகொண்டது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் தங்களது உயிருக்கு பாதுகாப்பு இல்லை என்றும் தமிழக அரசும் முதலவரும் தான் தங்களை மீட்டு தமிழகம் கொண்டு வர வேண்டும் என வீராங்கனை அபிநயா மற்றும் பயிற்சியாளர் கோரிக்கை வைத்துள்ளார்

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com