பாஜகவின் நிலைப்பாட்டை இன்னும் 2 நாட்களில் அண்ணாமலை அறிவிப்பார்- ராமலிங்கம்!

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் பாரதி ஜனதா கட்சியின் நிலைப்பாடு குறித்து இன்னும் 2 நாட்களில் அண்ணாமலை அறிவிப்பார் என மாநிலத் துணைத் தலைவர் ராமலிங்கம் பேட்டியளித்துள்ளார்.

பாஜகவின் நிலைப்பாட்டை இன்னும் 2 நாட்களில் அண்ணாமலை அறிவிப்பார்-  ராமலிங்கம்!

பாரதிய ஜனதா கட்சி சார்பில் ஈரோட்டில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில் இன்று நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடந்தது . இந்த கூட்டத்தில் பாஜக மாநில துணை தலைவர் கே. பி. ராமலிங்கம் கலந்து கொண்டு பேசினார். அதை தொடர்ந்து ராமலிங்கம் நிருபர்களுக்கு  பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

கடலூரில் நேற்று முன்தினம் பாஜக சார்பில் மாநில செயற்குழு நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் மாநில தலைவர் அண்ணாமலை தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் திமுக கூட்டணி கட்சி வேட்பாளைரை தோற்கடிப்பது குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது.

மேலும் படிக்க | ஈரோடு கிழக்குத் தொகுதி தேர்தலுக்கு 13 அமைச்சர்கள் உட்பட 32 பேரை நியமனம் செய்த திமுக...

அதைத் தொடர்ந்து இன்று ஈரோட்டில் திமுக ஆதரவு வேட்பாளர்களை வீழ்த்த வியூகம் அமைப்பது தொடர்பான நிர்வாகிகள் கூட்டம் நடக்கிறது. பாஜக ஈரோடு இடைத்தேர்தலில் போட்டியிடுமா அல்லது, அதிமுக.வில் எந்த அணிக்கு ஆதரவு என்பதை 2 நாட்களில் எங்கள் மாநிலத் தலைவர் அண்ணாமலை அறிவிப்பார். 

ஈரோடு கிழக்கு சட்டமன்ற இடைத்தேர்தலில் திமுக கூட்டணி கட்சி வேட்பாளர் வெற்றிபெறக்கூடாது.  அதிமுகவின் இரண்டு அணியும் ஒன்று சேர வேண்டும் என்பது எங்கள் கருத்து. திமுக.வை தோற்கடிக்க ஒன்றிணைந்து வியூகம் அமைத்து செயல்பட வேண்டியது அவசியம் என்றார்.

மேலும் படிக்க | ஈரோடு தொகுதி... அதிகாரப்பூர்வமாக வேட்பாளர் அறிவிப்பு.... காங்கிரஸின் திடீர் மாற்றம்...