பசி இல்லா தமிழகத்தை உருவாக்க அன்னதான திட்டம்...அமைச்சர் சேகர்பாபு அறிவிப்பு ...

பசி இல்லா தமிழகத்தை உருவாக்க அன்னதான திட்டம்...அமைச்சர் சேகர்பாபு அறிவிப்பு ...

தைப்பூசத்தை முன்னிட்டு ஒரு நாளைக்கு பத்தாயிரம் பேர் என்கிற வீதத்தில் 20 நாட்களில் 2 லட்சம் பேருக்கு அன்னதானம் வழங்கும் திட்டம் செயல்படுத்தப்படும் என பசி இல்லாத தமிழகத்தை உருவாக்க முதல்வர் உறுதியாக இருக்கிறார் ,எனவே அன்னதான திட்டம் விரிவுபடுத்தப்படும் என இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.

மேலும் தெரிந்துகொள்ள | ஈபிஎஸ்சிடம் பேச்சு போட்ட பாஜக மேலிடம்...அமைதி ஆன எடப்பாடி!

இந்து சமய அறநிலைத்துறை அமைச்சர்  பி.கே. சேகர் பாபு பெரம்பூர்,செம்பியம் லெட்சுமி அம்மாள் திருக்கோவிலில் ரூபாய் 18.5 லட்சம் மதிப்பீட்டிலான ராஜகோபுரம் மண்டப சுதை சிற்பங்கள் சரிபார்த்து வண்ணப் பூச்சி பூசுதல், கருங்கல் தளம் அமைத்தல், அம்மன் சன்னதி மகா மண்டபம், உப சன்னதிகள் பழுது பார்த்தல் பணிகளுக்காக திருப்பணிகளை தொடங்கி வைத்தார்.

 உதயநிதி ஸ்டாலின்க்கு வாழ்த்து தெரிவித்த அமைச்சர் :

49 கோயில்கள் கணக்கிடப்பட்டு ஆயிரம் ஆண்டுகள் பழமையான கோயில்கள் பழமை மாறாமல் சீரமைக்கப்பட்டு வருகின்றன.திமுகவின் அடித்தளம் பலமாக உள்ளது. நான்காம் தலைமுறைக்கான அரசியல் அடித்தளத்தை முதலமைச்சர் கொடுத்திருக்கிறார். இந்த இயக்கத்திற்கு எதுவெல்லாம் வளர்ச்சியை கொடுக்கின்றதோ, அவற்றை ஆராய்ந்து தனது அரசியல் அனுபவத்தால் எடுக்கும் அனைத்து முடிவுகளும் சிறப்பாக அமைந்துள்ளன. அந்த வகையில் இந்த இயக்கத்திற்கு பல்வேறு நிர்வாகிகள் நியமிக்கப்பட்டதும் அமையும். உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு தமிழகம் முழுவதும் பட்டி தொட்டி எங்கும் நலிந்தோருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன. அவரின் பிறந்தநாளுக்கு எனது வாழ்த்துக்கள். தமிழக மக்களுக்கும் திமுகவிற்கும் அவர் உறுதுணையாக என்றும் இருப்பார்.

அன்னதான திட்டம் :

தமிழகத்தில் 8 கோயில்களில் முழு நேர அன்னதான திட்டம் நடைமுறையில் உள்ளது. திமுக ஆட்சிக்கு வந்த பின்னர் ஒன்றாக இருந்தது எட்டாக மாறியது. இந்த ஆண்டு மேலும் 10 கோயில்கள் சேர்க்கப்பட்டுள்ளன. தைப்பூசத்தை முன்னிட்டு ஒரு நாளைக்கு பத்தாயிரம் பேர் என்கிற வீதத்தில் 20 நாட்களில் 2 லட்சம் பேருக்கு அன்னதானம் வழங்கும் திட்டம் செயல்படுத்தப்படும் என முதல்வர் அறிவித்துள்ளார்.  நெல்லையப்பர் கோவிலில் நாள்தோறும் 500 பேருக்கு தொடர்ச்சியாக அன்னதானம் வழங்கப்படுகிறது. பசி இல்லாத தமிழகத்தை உருவாக்க முதல்வர் உறுதியாக இருக்கிறார் எனவே அன்னதான திட்டம் விரிவுபடுத்தப்படும்.

மேலும் தெரிந்துகொள்ள | ஆளுநரிடம் புகார் அளித்த ஈபிஎஸ்...பதிலடி கொடுத்த அமைச்சர்!

 தகர்த்தெறியும் திறன் திமுக ஆட்சிக்கு உள்ளது :

தங்க நகைகளை உருக்கி வைப்பு நிதியாக வைக்கும் திட்டம் தொடர்ச்சியாக செயல்படுத்தப்பட்டு வருகின்றது. இதன் மூலம் கோவில் வருமானம் பெருகுகிறது.  4000 கிலோ அளவிற்கான கோவில் நகைகள் வைப்பு நிதியாக வைக்கப்படும். திருக்கோயில் வளர்ச்சிக்கு வட்டித்தொகை பயன்படுத்தப்படும். எவ்வளவு இடையூறு வந்தாலும் அவற்றை தகர்த்தெறியும் திறன் இந்த ஆட்சிக்கு உள்ளது என தெரிவித்தார்.