ஆளுநரிடம் புகார் அளித்த ஈபிஎஸ்...பதிலடி கொடுத்த அமைச்சர்!

ஆளுநரிடம் புகார் அளித்த ஈபிஎஸ்...பதிலடி கொடுத்த அமைச்சர்!

அரசு மருத்துவமனைகளில் போதுமான அளவு மருந்துகள் கையிருப்பில் உள்ளதாக மாநில மருத்துவம் மற்றும் சுகாதாரத் துறை அமைச்சர் மா சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

மருத்துவர்கள் எப்படி காரணமாக முடியும்?:

சென்னை ஆதம்பாக்கத்தில் உள்விளையாட்டரங்கம் அமைப்பதற்கான பணிகளுக்கு அமைச்சர் மா சுப்பிரமணியன் இன்று அடிக்கல் நாட்டினார். இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், எழும்பூர் தாய் சேய் நல மருத்துவமனையில் இருந்து வெளியேறிய பெண், திருவள்ளூரில் ரயில் முன்பு பாய்ந்து தற்கொலை செய்து கொண்டது குறித்த கேள்விக்கு பதிலளித்த அமைச்சர், மருத்துவமனையில் இருந்து வெளியேறி பெண் தற்கொலை செய்துக்கொண்டதற்கு மருத்துவர்கள் எப்படி காரணமாக முடியும்? என்று மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.

இதையும் படிக்க: வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது பிஎஸ்எல்வி - சி 54 வகை ராக்கெட்...!

நேரில் ஆய்வு செய்யட்டும்:

தொடர்ந்து பேசிய அவர், மருத்துவமனைகளில் மருந்து தட்டுப்பாடு இருப்பதாக ஆளுநரிடம் எடப்பாடி  புகார் அளித்தார். ஆனால், தமிழகத்தில் 32 மாவட்டங்களில் உள்ள மருந்து கிடங்குகளிலும் தேவையான மருந்துகள் கையிருப்பில் உள்ளது. வேண்டுமென்றால், புகார் அளித்த எடப்பாடி பழனிச்சாமி, நேரில் சென்று ஆய்வு செய்து கொள்ளலாம் என்று சுகாதாரத்துறை அமைச்சர் தெரிவித்தார்.