மாப்பில் கிடைத்த 1 கிலோ தங்கம்! விமான நிலையத்தில் பறிமுதல்!

சென்னை பன்னாட்டு  விமான நிலையத்தில் கிளினிங் மாப் கம்பத்தில் ரூ.78 லட்சம் மதிப்புள்ள 1 கிலோ 811 கிராம் தங்கம் பறிமுதல் ஒப்பந்த ஊழியர் பிடிப்பட்டார்.

மாப்பில் கிடைத்த 1 கிலோ தங்கம்! விமான நிலையத்தில் பறிமுதல்!

சென்னை: பன்னாட்டு விமான நிலையத்தில் விமான நிலைய ஒப்பந்த பணியாளர்கள்  பயணிகள் வருகை பகுதியை  தூய்மைப்படுத்தும் பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனா். அப்போது ஒரு ஒப்பந்த ஊழியர் வைத்திருந்த கிளினிங் மாப் கம்பம் மீது மத்திய தொழில் பாதுகாப்பு படை வீரருக்கு சந்தேகம் ஏற்பட்டது.

இதையடுத்து பாதுகாப்பு படை வீரா் ஒப்பந்த ஊழியரிடம் அந்த மாப் கம்பத்தை கழட்டி காட்டும் படி கூறினார். அப்படி மாப்பை கழட்டி காட்டும் போது அந்த மாப்பின் கமத்தின் குழாய்க்குள் இருந்து 10 பாக்கெட்கள் வெளியே வந்து விழுந்தன.

மேலும் படிக்க | எடப்பாடி! வராதீர்! வராதீர்..! ஓபிஎஸ் கோட்டையில் ஈபிஎஸ்க்கு எதிர்ப்பு..!

இதையடுத்து அதிா்ச்சியடைந்த  பாதுகாப்பு படை வீரா் அந்த 10 பாக்கெட்களையும் எடுத்து பிரித்து ஆய்வு செய்தாா். அந்த பாக்கெட்களில் ரூ. 78 லட்சம் மதிப்புள்ள 1 கிலோ 811 கிராம் தங்க பசை இருந்தது. இதை மத்திய தொழில் பாதுகாப்பு படை வீரா் தங்கப் பசை, ஒப்பந்த ஊழியருடன் மாப்பையும் கைப்பற்றி  உயா் அதிகாரிகளிடம் ஒப்படைத்தாா்.

மத்திய தொழில் பாதுகாப்பு படை அதிகாரிகள் விசாரணை நடத்தி விட்டு சென்னை விமான நிலைய சுங்கத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்தனா்.

மேலும் படிக்க | பெண்கள் ஒப்பாரி வைத்து போராட்டம்..! தீர்வு கிடைக்குமா?

சுங்கத்துறை அதிகாரிகள்  தங்கம் எப்படி வந்தது? வெளிநாட்டில் இருந்து கடத்தி வந்த தங்கத்தை கடத்தி  ஆசாமி விமான நிலைய ஒப்பந்த ஊழியரிடம் கொடுத்து  மாப்பிற்குள் மறைத்து வைத்து வெளியே கொண்டு செல்ல முயன்றிருக்கலாம்  என்று தெரிகிறது.

இந்த சம்பவம் சென்னை விமான நிலையத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் படிக்க | 68வது தேசிய விருதுகள் வழங்கும் விழா:ஆதிக்கம் செலுத்திய கோலிவுட்!