நாமக்கல் : ஒரு மாதத்திற்கு பிறகு உயர்ந்த முட்டை விலை...!

நாமக்கல் : ஒரு மாதத்திற்கு பிறகு உயர்ந்த முட்டை விலை...!

நாமக்கல் மண்டலத்தில் முட்டை விலை 4 ரூபாய் 45 காசுகளாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. 

நாமக்கல் மண்டலத்தில் உள்ள ஆயிரத்திற்கும் மேற்பட்ட கோழிப்பண்ணைகளில் சுமார் 6 கோடி முட்டையின கோழிகள் வளர்க்கப்பட்டு தினசரி 5 கோடி முட்டைகள் உற்பத்தி செய்யப்படுகின்றன. இம்முட்டைகள் தமிழகம், கேரளா மற்றும் புதுவை உள்ளிட்ட பகுதிகளுக்கு சில்லறை விற்பனைக்கும், தமிழக அரசின் சத்துணவு திட்டத்திற்கும் வழங்கப்படுகிறது.

இதையும் படிக்க : அறப்போர் இயக்கத்துக்கு எச்சரிக்கை விடுத்த செந்தில் பாலாஜி...!

மீதமுள்ள முட்டைகள் வெளிமாநிலங்களுக்கும் வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகிறது. இந்நிலையில் முட்டையின் விலையை இரு நாட்களுக்கு ஒருமுறை தேசிய முட்டை ஒருங்கிணைப்புக் குழு சார்பில் நிர்ணயம் செய்யப்படுகிறது. 

இந்நிலையில், தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழு சார்பில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில்,  முட்டை விலை 5 காசுகள் உயர்த்தப்பட்டு 4 ரூபாய் 45 காசுகளாக நிர்ணம் செய்யப்பட்டுள்ளது. மேலும், கறிக்கோழி விலை கிலோ 80 ரூபாயாகவும், முட்டைக் கோழி விலை கிலோ 60 ரூபாயாகவும் நிா்ணயிக்கப்பட்டுள்ளது.