”ஜல்லிக்கட்டு போட்டியை விளையாட்டு பட்டியலில் சேர்க்க நடவடிக்கை எடுக்கப்படும்” - அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்!

”ஜல்லிக்கட்டு போட்டியை விளையாட்டு பட்டியலில் சேர்க்க நடவடிக்கை எடுக்கப்படும்” - அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்!

ஜல்லிக்கட்டை விளையாட்டு பட்டியலில் சோ்ப்பது குறித்து முதலமைச்சருடன் ஆலோசித்து நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சா் உதயநிதி ஸ்டாலின் தொிவித்துள்ளாா். 

புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் நடந்த நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சியில் அமைச்சா் உதயநிதி ஸ்டாலின் பங்கேற்று, 27 கோடியே 67 லட்சம் ரூபாய் மதிப்பில் பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கினாா். 

இதையும் படிக்க : ”கடந்த 9 ஆண்டுகளில் இந்தியாவில் விளையாட்டின் புதிய சகாப்தம் தொடங்கியுள்ளது” - பிரதமர் மோடி பெருமிதம்!

தொடா்ந்து செய்தியாளா்களை சந்தித்து பேசிய உதயநிதி, ஜல்லிக்கட்டு கலாச்சார விளையாட்டாக தான் தற்போது உள்ளது. அதை விளையாட்டு பட்டியலில் சேர்ப்பதற்கு முதலமைச்சாிடம் ஆலோசித்து நடவடிக்கை எடுக்கப்படும் என தொிவித்தாா். 

தொடா்ந்து பேசிய அவா், சிலம்பாட்ட வீரர்களுக்கு வேலைவாய்ப்பில் மூன்று சதவீத இட ஒதுக்கீடு வழங்கும் திட்டம் பரிசீலனையில் உள்ளதாகவும் தொிவித்தாா்.