” எதிர்ப்பில் பிறந்தது தான் அதிமுக கட்சி” - விஜயபாஸ்கர் பேச்சு!

” எதிர்ப்பில் பிறந்தது தான் அதிமுக கட்சி” - விஜயபாஸ்கர் பேச்சு!

எம் ஜிஆர், ஜெயலலிதாவால் வளர்க்கப்பட்ட  கட்சி இன்னும் அவர்களைப் போன்று பல தலைவர்களை உருவாக்கும் என முன்னாள் சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

திமுக எதிர்ப்பில் பிறந்தது தான் அதிமுக கட்சி:

புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலையில் அதிமுக பொன்விழா நிறைவு தின பொதுக்கூட்டம்  செக்போஸ்ட் அருகே நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் அதிமுகவின் அமைப்புச் செயலாளரும் தற்போதைய விராலிமலை சட்டமன்ற உறுப்பினரும் முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சருமான விஜயபாஸ்கர் கலந்து கொண்டு உரையாற்றினார். அப்போது பேசிய அவர், திமுகவை எதிர்ப்பது தான் அதிமுகவின் கொள்கை என்றும் , திமுக எதிர்ப்பில் பிறந்தது தான் அதிமுக கட்சி எனவும், இக்கட்சி இன்னும் 50 ஆண்டுகளுக்கு நிலைத்திருக்கும் என்றும் தெரிவித்தார்.  

இதையும் படிக்க: மதுரை விமான நிலையத்திற்கு தேவரின் பெயரே பொருத்தமாக இருக்கும் - மத்திய அரசுக்கு வைரமுத்து கோரிக்கை!

வெற்றி நடைப்போடும் அதிமுக:

தொடர்ந்து பேசிய அவர், எம். ஜி.ஆர், ஜெயலலிதாவின் மறைவிற்குப் பின்னர் இந்த கட்சியின் நிலை குறித்து சிலர் விமர்சனம் செய்த போதும் அவற்றைக் கடந்து இன்றும் அதிமுக வெற்றி நடை போடுவதாகவும் விஜயபாஸ்கர் பேசினார்.

பல தலைவர்களை அதிமுக உருவாக்கும்:

இதைத்தொடர்ந்து, எம். ஜி.ஆரால் உருவாக்கப்பட்ட இந்த கட்சி ஜெயலலிதாவால் வளர்க்கப்பட்டது என்றும், அதேபோல் வரும் காலங்களில் அவர்களைப் போல இன்னும் பல தலைவர்களை இந்த கட்சி உருவாக்கும் என்றும், இது மக்களுக்கான கட்சி, மக்களை நேசிக்கும் கட்சி என்றும் முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் கூட்டத்தில் பேசினார்.