மதுரை விமான நிலையத்திற்கு தேவரின் பெயரே பொருத்தமாக இருக்கும் - மத்திய அரசுக்கு வைரமுத்து கோரிக்கை!

மதுரை விமான நிலையத்திற்கு தேவரின் பெயரே பொருத்தமாக இருக்கும் - மத்திய அரசுக்கு வைரமுத்து கோரிக்கை!

மதுரை விமான நிலையத்திற்கு முத்துராமலிங்க தேவரின் பெயரை சூட்டவேண்டும் என கவிஞர் வைரமுத்து கோரிக்கை விடுத்துள்ளார். 

தேவர் சிலைக்கு மரியாதை செலுத்திய வைரமுத்து:

பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் 115வது பிறந்தநாளையொட்டி சென்னை நந்தனத்தில் உள்ள அவரது சிலைக்கு கவிஞர் வைரமுத்து மரியாதை செலுத்தினார். அதன் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அவர், பசும்பொன் கிராமத்தில் பிறந்த முத்துராமலிங்க தேவரின் குணம், தியாகம் மற்றும் நேர்மையின் கூட்டு முயற்சியே தேவர் என்பதன் பொருள், அவர் வாழ்வு தேசியமும் , தியாகமும் நிறைந்தது என்று புகழ்ந்து பேசினார். 

இதையும் படிக்க: பட்டியலின மக்களுக்காக கடைசி வரை போராடியவர் - டி.ஆர்.பாலு புகழாரம்!

மதுரை விமான நிலையத்திற்கு தேவரின் பெயரை சூட்ட வலியுறுத்தல்:

தொடர்ந்து பேசிய அவர், முத்துராமலிங்க தேவர் சாதிய அடையாளத்தை தாண்டி தேசிய அளவில் கொண்டாட வேண்டியவர் எனவும், தனது பொன் பொருள் அனைத்தையும் மக்களுக்காக தியாகம் செய்தவர் எனவும் தெரிவித்தார். தொடர்ந்து, மதுரை விமான நிலையத்திற்கு தேவரின் பெயரே பொருத்தமானதாக இருக்கும் என்று கூறிய அவர், இதுகுறித்து மத்திய அரசு பரிசீலிக்க வேண்டும் எனவும் கேட்டுகொண்டார்.