கோயம்பேட்டில் பொங்கல் சிறப்பு சந்தை...நேரில் பார்வையிட்ட அமைச்சர் சொன்னது என்ன?

கோயம்பேட்டில் பொங்கல் சிறப்பு சந்தை...நேரில் பார்வையிட்ட அமைச்சர் சொன்னது என்ன?

சென்னை, கோயம்பேடு காய்கறி சந்தை வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள பொங்கல் சிறப்பு சந்தையை அமைச்சர் சேகர்பாபு நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

அமைச்சர் நேரில் ஆய்வு :

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு கோயம்பேடு மொத்த விற்பனை அங்காடி வளாகத்தில் 7 புள்ளி 5 ஏக்கர் பரப்பளவில் அமைக்கப்பட்டுள்ள, பொங்கல் சிறப்பு சந்தையை அமைச்சர் சேகர்பாபு நேரில் ஆய்வு செய்தார்.

நுழைவு கட்டணம் வசூலிக்கப்படும் :

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், பொங்கல் பண்டிகைக்காக மஞ்சள், கரும்பு போன்ற பொருட்களை ஒரே இடத்தில் வாங்குவதற்கு ஏற்ற வகையில், இச்சந்தை அமைக்கப்பட்டுள்ளதாவும், சந்தைக்கு வரும் கரும்பு மற்றும் மஞ்சள் லாரிகளுக்கு நுழைவு கட்டணமாக ஆயிரம் ரூபாய் வசூலிக்கப்படும் எனவும் தெரிவித்தார். 

இதையும் படிக்க : பெரியாரின் சித்தாந்தங்களுடன் அனிமேஷன் தொடர்...பேராசிரியரின் புதிய முயற்சி...!

மேலும், மார்கெட் பகுதியில் குப்பைகளை அகற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும், போக்குவரத்தை ஒழுங்குபடுத்த கூடுதல் போக்குவரத்து காவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் சேகர்பாபு தெரிவித்தார்.