பெரியாரின் சித்தாந்தங்களுடன் அனிமேஷன் தொடர்...பேராசிரியரின் புதிய முயற்சி...!

பெரியாரின் சித்தாந்தங்களுடன் அனிமேஷன் தொடர்...பேராசிரியரின் புதிய முயற்சி...!

பெரியாரின் கொள்கைகளை முதன் முதலாக அனிமேஷன் கார்ட்டூன் மூலமாக குழந்தைகளிடத்தில் கொண்டு செல்லும் முயற்சியில் பேராசிரியர் ஒருவர் ஈடுபட்டுள்ளார். இது குறித்த செய்தியை விரிவாக பார்க்கலா,.

கார்ட்டூன் பார்க்கும் குழந்தைகள் :

பொதுவாகவே, குழந்தைகளிடம் கதைகள் கேட்பது கார்ட்டூன்களை பார்த்து ரசிப்பது என்ற குணாதிசயம் அதிகமாகவே காணப்படும். தொலைக்காட்சியில் எப்பொழுதாவது ஒளிபரப்பப்படும் கார்ட்டூன் தொடர்களை பார்த்து  வளர்ந்து வந்த குழந்தைகளின் காலகட்டம் கடந்து, தற்பொழுது அனைவரது கைகளிலும் ஸ்மார்ட் போன் உபயோகத்தால் youtube மூலமாக பல அனிமேஷன் கார்ட்டூன் கதைகள் கொட்டி கிடக்கின்றன. 

பெரியாரின் சிந்தனைகளை விதைக்கும் முயற்சி :

இந்த அபரிமிதமான தொழில்நுட்ப வளர்ச்சியால் குழந்தைகளிடையே அறிவியலுக்கு புறம்பான பல தவறான கருத்துக்கள் விதைக்கப்படுவதாக சமூக ஆர்வலர்கள் பலர் பேசி வரக்கூடிய சூழ்நிலையில், தஞ்சாவூர் கரந்தை தமிழ் சங்கத்தில் பணியாற்றும் பேராசிரியர் எழிலரசன், தனது புதுவித முயற்சியால் குழந்தைகளிடையே முற்போக்குத்தனத்தை விதைக்கும் விதமாக பெரியாரின் சிந்தனைகளை 2D, 3D அனிமேஷன் செய்து வெளியிட்டு வருகிறார்.

இதையும் படிக்க : சட்டப்பேரவையில் எதிர்கட்சித் தலைவர் ஈபிஎஸ் - ன் கேள்விக்கு அமைச்சர்கள் பதில்...!

அதன்படி, இட ஒதுக்கீடு போன்ற கருத்துக்களை குழந்தைகள் எளிமையாக புரிந்து கொள்ளும் வகையில் ஆனியன் (வெங்காயம்) மற்றும் காய்கறிகளை உபயோகித்து கார்ட்டுன் மூலமாக விளக்கியுள்ளார். இது தற்பொழுது பலராலும் பார்க்கப்பட்டும் பகிரப்பட்டு, வருகின்றது.

பேராசிரியர் பேச்சு :

இது குறித்து பேசிய பேராசிரியர் எழிலரசன், சமூக நீதிக்காகவும் சமத்துவத்திற்காகவும் போராடிய  ஒரு தலைவரை குழந்தைகளிடம் இன்றைய காலகட்டத்தில் சேர்க்க வேண்டும் என்பது ஒரு மிகப்பெரிய கடமையாகவும், அவசியமாகவும்  உள்ளது என்றார்.

தொடர்ந்து, தமிழ்நாடு அரசு பள்ளி கல்வித்துறை சார்பில் புத்தகங்களில் QR கோடு மூலமாக குழந்தைகள் எளிதில் புரிந்து கொள்ளும்  வகையில் மேற்கொண்டுள்ள முயற்சிகள் வரவேற்கத்தக்கது..அவற்றை இன்னும் அனிமேஷன் மூலமாக பாடங்களை கற்பதற்கான வகையில் விரிவுபடுத்த வேண்டும் என்பது அவசியமான ஒன்றாக உள்ளதாக தெரிவித்தார்.