நங்கவரத்தில் கருணாநிதிக்கு சிலை அமைக்க கோரிக்கை...செய்தித்துறை அமைச்சர் சாமிநாதன் பதில் !

நங்கவரத்தில் கருணாநிதிக்கு சிலை அமைக்க கோரிக்கை...செய்தித்துறை அமைச்சர் சாமிநாதன் பதில் !

கரூர் மாவட்டம், நங்கவரத்தில் கருணாநிதிக்கு நினைவுச்சின்னம் அமைப்பது குறித்து உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என செய்தித்துறை அமைச்சர் சாமிநாதன் தெரிவித்துள்ளார்.

சட்டப்பேரவையின் கேள்வி நேரத்தில், முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி முதன்முதலில் சட்டப்பேரவை உறுப்பினராக தேர்வான குளித்தலை தொகுதியில், விவசாயிகளுக்கு ஆதரவாக நங்கவரத்தில் போராட்டம் நடத்தியதாகவும், அவருக்கு நினைவுச்சின்னம் அமைக்க அரசு முன்வருமா என குளித்தலை சட்டமன்ற உறுப்பினர் மாணிக்கம் கேள்வி எழுப்பினார்.

இதையும் படிக்க : தயிர் பாக்கெட்டுகளில் தாஹி என்ற வார்த்தை அவசியமில்லை...கீ.வீரமணி பேட்டி!

அதற்கு பதிலளித்த செய்தித்துறை அமைச்சர் சாமிநாதன், விவசாயிகளுக்கு ஆதரவாக கருணாநிதியின் போராட்டம் வரலாற்றில் குறிப்பிட வேண்டியது எனவும், நினைவுச்சின்னம் அமைப்பது குறித்து முதலமைச்சரின் கவனத்திற்கு கொண்டு சென்று நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்தார்.