தயிர் பாக்கெட்டுகளில் தாஹி என்ற வார்த்தை அவசியமில்லை...கீ.வீரமணி பேட்டி!

தயிர் பாக்கெட்டுகளில் தாஹி என்ற வார்த்தை அவசியமில்லை...கீ.வீரமணி பேட்டி!

தமிழ்நாடு உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இந்திக்கு ஒருபோதும் இடமில்லை என்று திராவிட கழக தலைவர் கி.வீரமணி தெரிவித்துள்ளார்.

புதுச்சேரி மாநிலம் காரைக்கால் மாவட்டத்தில் திராவிட கழகம் சார்பில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் திராவிட கழகத்தின் தலைவர் கி.வீரமணி கலந்து கொண்டார். இதனை அடுத்து செய்தியாளர்களை சந்தித்த அவர், சேது சமுத்திர திட்டப் பணிகளை மீண்டும் தொடங்கி திட்டத்தை நிறைவேற்ற மத்திய அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். இத்திட்டம் தொடர்பாக தமிழகத்தை தொடர்ந்து புதுச்சேரி அரசும் சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்று கூறினார்.

இதையும் படிக்க : ஓபிஎஸ் மேல்முறையீட்டு மனு உயர்நீதிமன்றத்தில் இன்று விசாரணை!!!

தொடர்ந்து, தயிர் பாக்கெட்டுகளில் இந்தி மொழியில் தாஹி என்ற வார்த்தை இருக்க வேண்டும் என்ற மத்திய அரசின் பரிந்துரை குறித்து பேசியவர், தமிழகத்தில் தயிர் பாக்கெட்டுகளில் இந்தி மொழியில் அச்சிட வேண்டும் என்பது இந்தி மொழி திணிப்புக்கு மற்றும் ஒரு உதாரணம். தயிர் என்ற வார்த்தையே தமிழகத்தில் உள்ள அனைவருக்கும் புரியும், இதில் இந்தி வார்த்தை என்பது அவசியமில்லை. இந்திக்கு ஒருபோதும் தமிழகத்தில் மட்டுமல்ல புதுச்சேரி, கர்நாடகா, வங்காளம், பஞ்சாப் இன்னும் சொல்லப்போனால் கிழக்கு இந்தியாவில் கூட இடமில்லை என்று சொல்லக்கூடிய அளவுக்கு இருப்பதாக கூறினார். மேலும், எவ்வளவு வேகமாக இந்தியை திணிக்கிறார்களோ, அந்த அளவிற்கு அவர்கள் ஆட்சிக்கு அவர்களே குழி தோண்டி கொள்கிறார்கள் என்று பொருள் என கி.வீரமணி தெரிவித்துள்ளார்.