சென்னை உயர் நீதிமன்றத்திற்கு நியமிக்கப்பட்ட 5 கூடுதல் நீதிபதிகளுக்கு பொறுப்புத் தலைமை நீதிபதி டி.ராஜா பதவி பிரமாணம் செய்துவைக்க உள்ளார்.
ஜனவரி 17ம் தேதி கூடிய உச்ச நீதிமன்ற கொலிஜியம் கூட்டத்தில் சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகளாக ஒன்பது பேரை நியமிக்க கொலிஜியம் மத்திய அரசுக்கு பரிந்துரை செய்தது.
மாவட்ட நீதிபதிகள் அந்தஸ்தில் இருந்த பி. வடமலை, ஆர். கலைமதி, கே.ஜி.திலகவதி ஆகிய மூவரையும், வழக்கறிஞர்களாக உள்ள லக்ஷ்மி நாராயணன், விக்டோரியா கௌரி உள்ளிட்ட 6 பேரையும் சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகளாக நியமிக்க பரிந்துரைக்கப்பட்டது.
இதையும் படிக்க : அதிமுக வேட்பாளர் கே.எஸ்.தென்னரசு பிரசாரம்..!
இவர்களில் வழக்கறிஞர்களான விக்டோரியா கௌரி, பி.பி.பாலாஜி, கே.கே.ராமகிருஷ்ணன் ஆகியோரையும், மாவட்ட நீதிபதிகளான ஆர்.கலைமதி, கே.ஜி.திலகவதி ஆகியோரையும் சென்னை உயர் நீதிமன்ற கூடுதல் நீதிபதிகளாக நியமித்து குடியரசுத்தலைவர் உத்தரவிட்டுள்ளார்.
இந்த ஐந்து பேருக்கும் சென்னை உயர் நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதி டி.ராஜா, உயர் நீதிமன்ற வளாகத்தில் காலை 10:45 மணிக்கு நடைபெறும் நிகழ்ச்சியில் பதவிபிரமாணம் செய்து வைக்க உள்ளார்.