31 ஜோடிகளுக்கு திருமணம்...மங்கல நாணை எடுத்து கொடுத்து வாழ்த்திய முதலமைச்சர்!

31 ஜோடிகளுக்கு திருமணம்...மங்கல நாணை எடுத்து கொடுத்து வாழ்த்திய முதலமைச்சர்!

சென்னையில் 31 ஜோடிகளுக்கு திருமணம் நடத்தி வைத்து உரையாற்றிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அரசின் சாதனைகளை எதிர்க்கட்சிகளால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை என தெரிவித்தார்.

திருமணம் நடத்தி வைத்த முதலமைச்சர்:

தமிழகம் முழுவதும் இந்துசமய அறநிலையத்துறை சார்பில் 220 ஜோடிகளுக்கு இலவச திருமணம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் சென்னை, திருவான்மியூரில் நடைபெற்ற திருமண நிகழ்ச்சியில் பங்கேற்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், 31 ஜோடிகளுக்கு தங்கத்திலான மங்கல நாணை எடுத்து கொடுத்து வாழ்த்தினார்.

இதையும் படிக்க: 50 ஆண்டு சாதனையை முறியடித்த ஓாியன் விண்சிமிழ்... கடலில் விழுமா?

அவர்களால் பொறுத்துகொள்ள முடியவில்லை:

அதனைதொடர்ந்து பேசிய அவர், தமிழகத்தில் மட்டும்தான் இந்து அறநிலையத்துறை சிறப்பாக செயல்படுவதாகவும், அரசின் சாதனைகளை எதிர்க்கட்சிகளால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை எனவும் தெரிவித்தார்.