ஒவ்வொரு 8 நிமிடத்திற்கும் 1 பெண் கர்ப்பப்பை வாய் புற்று நோயால் உயிரிழக்கும் அவலம்!

ஒவ்வொரு 8 நிமிடத்திற்கும் 1 பெண் கர்ப்பப்பை வாய் புற்று நோயால் உயிரிழக்கும் அவலம்!
Published on
Updated on
1 min read

இந்தியாவில் ஒவ்வொரு 8 நிமிடத்திற்கும் ஒரு பெண் கர்ப்பப்பை வாய் புற்று நோயால் உயிரிழப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

சென்னை சேப்பாக்கத்தில் உள்ள பத்திரிக்கையாளர் மன்றத்தில், சமூகம் மற்றும் சமத்துவத்திற்கான மருத்துவர்கள் சங்க பொதுச் செயலாளர் ரவீந்திரநாத் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், இந்தியாவில் ஒவ்வொரு 8 நிமிடத்திற்கும், ஒரு பெண் கர்ப்பப்பை வாய் புற்று நோயால் உயிரிழப்பதாகக் கூறினார்.

ஒவ்வொரு ஆண்டும் கிட்டத்தட்ட ஒன்றரை லட்சம் பெண்கள் கருப்பை வாய்ப் புற்றுநோயால் பாதிக்கப்படுவதாகவும், அதில் 75 ஆயிரம் பேர் உயிரிழப்பதாகவும் தெரிவித்தார்.

எச்.பி.வி. தடுப்பூசி மூலம் இதனை பெருமளவில் தடுத்திட முடியும் என பல்வேறு நாடுகள் உறுதி செய்துள்ள நிலையில், அரசு மருத்துவமனைகளில் இந்த தடுப்பூசி இலவசமாக கிடைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com