மன்னிக்கவும்.. இதற்கு பேர் தான் கர்மா...! - ஷமியின் தெரிக்க விடும் ட்வீட்:

மன்னிக்கவும்.. இதற்கு பேர் தான் கர்மா...! - ஷமியின் தெரிக்க விடும் ட்வீட்:

நேற்று, 2022ம் ஆண்டின் டி 20 உலகக்கோப்பைக்கான போட்டியில், இங்கிலாந்து அணிக்கு எதிராக பாகிஸ்தான் அணி போட்டியிட்டு தோற்றது. 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இங்கிலாந்து அணி வெற்றி பெற்ற நிலையில், பாகிஸ்தான் அணி தோல்வியால் கவலையில் ஆழ்ந்தது. இது அணிக்கு மட்டும் அல்ல, பாகிஸ்ஹான் கிரிக்கெட் அணியின் ரசிகர்களுக்கும் பெரும் வேதனையை அளித்தது.

இதனைத் தொடர்ந்து, முன்னாள் பாகிஸ்தான் கிரிக்கெட் வீரரும், கிரிக்கெட் கமண்டேட்டருமான ஷோயப் அக்தர், தனது ட்விட்டர் பக்கத்தில், மனமுடைந்த ஹார்ட் இமோஜியை பதிவிட்டிருந்தார். இதற்கு பல இந்தியர்கள் கேலி செய்வது போல கமெண்ட் செய்து அதற்கு பதில் பதிவிட்டுக் கொண்டிருந்த நிலையில், இந்திய கிரிக்கெட் வீரர் முகமது ஷமி, இதற்கு பதிலளிக்கும் வகையில், “மன்னிக்க வேண்டும் தோழரே... இதற்கு பெயர் தான் கர்மா...” என பதிவிட்டுள்ளார்.

மேலும் படிக்க | பாகிஸ்தான் VS இங்கிலாந்து: டி20 உலகக்கோப்பையை வென்றது யார்?

இந்த பதிவானது பலரது கவனத்தைப் பெற்றுள்ளது. சுமார் 2 லட்சம் வரையிலான லைக்குகளைப் பெற்று, பல்லாயிரம் மறுபகிர்வுகளையும் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. பலர் இவரது ட்வீட்டை ஆதரித்தாலும் ஒரு சிலர் இதற்கு மறுப்பும் எதிர்ப்பும் தெரிவித்து வருகின்றனர்.

அதிலும், பாகிஸ்தான் முன்னாள் கிரிக்கெட் வீரர் ஷாகித் அஃப்ரிதி, தனது கருத்துகளைத் தெரிவித்தது பெரிதாக பேசப்பட்டு வருகிறது. தனது பாகிஸ்தானிய வீரர்கள் கவலையடைந்துள்ள நிலையில், ஒரு இந்திய கிரிக்கெட் வீரர் இது பொன்ற கேலி செய்வது மன வேதனை அளிப்பதாக ஒரு பேட்டியில் தெரிவித்திருந்தார்.

மேலும் படிக்க | பாகிஸ்தான் VS இங்கிலாந்து அணி மோதல்...வெல்லப்போவது யார்?

இது குறித்து பேசிய அவர், “நாம் கிரிக்கெட் வீரர்கள். கிரிக்கெட் தூதர்கள் மற்றும் மற்றவர்களுக்கான முன்மாதிரிகள். நாம் அடுத்தடுத்த நாட்டவர்கள். மக்களுக்கு இடையில் வெறுப்பைப் பகிர வைக்கும் இது போன்ற நிகழ்வுகள் நடக்கவே கூடாது. நாமே இப்படி செய்தால், பொது மக்களிடம் இருந்து எதுவும் எதிர்பார்க்க முடியாது” என அறிவுரை கூறினார்.

மேலும், “நீங்கள் ஓய்வு பெற்ற கிரிக்கெட் வீரராக இருந்தாலும் இது போன்ற செயல்கள் கண்டிக்கத்தக்கவை. இப்படியிருக்க, துறையில் இருந்து கொண்டே இது போன்ற கருத்துகளை நீங்கள் வெளிப்படுத்துவது தவறு.. இவற்றை தவிர்த்துக் கொள்ளுங்கள்” என கூறினார்.

மேலும் படிக்க | தோனி அவமதிப்பு வழக்கு...நேரில் ஆஜராக உத்தரவு!!

இவர் கூறிய கருத்தை ஒரு சிலர் ஒப்புக்கொண்டாலும், பலர் கேலியிலேயே தங்களது முதல் பார்வையை இட்டு வருகின்றனர். பாகிஸ்ஹான் ஒரு காலத்தில் நமது தம்பி நாடு என்பதையும், நம்மை அடிமை படுத்திய நாடான இங்கிலாந்தை ஏன் ஆதரிக்கிறோம் என்றும் ஒரு நிமிடம் யோசித்தால், இது போன்ற அவதூறு கருத்துகள் அதிகமாக பகிரப்படாது...

--- பூஜா ராமகிருஷ்ணன்

மேலும் படிக்க | டிரண்டிங்கில் I Stand with Team India..! வைரலாகும் ரோகித் சர்மாவின் விடியோ..!