பாகிஸ்தான் VS இங்கிலாந்து அணி மோதல்...வெல்லப்போவது யார்?

பாகிஸ்தான் VS இங்கிலாந்து அணி மோதல்...வெல்லப்போவது யார்?

டி20 உலகக் கோப்பையின் இறுதி போட்டியில் இங்கிலாந்து-பாகிஸ்தான் அணிகள் இன்று பலபரீட்சை நடத்துகின்றன. 

டி20 உலக் கோப்பை தொடர்:

ஆஸ்திரேலியாவில் கடந்த மாதம் 16-ம் தேதி தொடங்கிய டி20 உலக் கோப்பை தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வந்தது. சூப்பர் 12 சுற்று முடிவில் நியூசிலாந்து, இங்கிலாந்து, இந்தியா, பாகிஸ்தான் ஆகிய அணிகள் அரையிறுதியில் மோதின. 

பாகிஸ்தான் VS இங்கிலாந்து:

இதில் பாகிஸ்தான் அணி நியூசிலாந்தையும், இங்கிலாந்து இந்தியாவையும் தோற்கடித்து இறுதி சுற்றுக்கு முன்னேறியது. இவ்விரு அணிகளும் இன்று இந்திய நேரப்படி 1. 30 மணிக்கு இறுதிப் போட்டியில் மோதவுள்ளன. உலகக்கோப்பை தொடரை வெல்ல போவது யார் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே நிலவி வருகிறது.

இதையும் படிக்க: கூட்டணி மாறுகிறாரா ஸ்டாலின்?

2009-ம் ஆண்டு உலகக் கோப்பையை வென்ற பாகிஸ்தான் அணி, 3-வது முறையாகவும், 2010-ம் ஆண்டு கோப்பையை வென்ற இங்கிலாந்து அணி 3-வது முறையாகவும் இறுதிப் போட்டிக்குள் அடியெடுத்து வைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.