அப்போ இந்த பார்ட்னர்ஷிப் இனி இல்லையா? ரசிகர்களுக்கு ரெய்னா கொடுத்த ஷாக்..!

அப்போ இந்த பார்ட்னர்ஷிப் இனி இல்லையா? ரசிகர்களுக்கு ரெய்னா கொடுத்த ஷாக்..!

ஐபிஎல்லில் இருந்து ஓய்வு பெறுவதாக சிஎஸ்கே அணியின் முன்னாள் வீரர் சுரேஷ் ரெய்னா அறிவித்திருப்பது அவருடைய ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சின்ன தல:

இந்திய கிரிக்கெட் அணியில் மிக முக்கிய வீரராக ஜொலித்தவர் சுரேஷ் ரெய்னா. ரசிகர்களால் ”சின்ன தல” என்று அன்புடன்  அழைக்கப்பட்டவர் சுரேஷ் ரெய்னா. ஒரு கட்டத்தில்  இவரும் “தல” தோனியும் இணைந்து களமிறங்கினால் வேற லெவல் பார்ட்னர் ஷிப் என்ற பெருமையை பெற்றவர் ரெய்னா. இதனால் தான் இவருக்கு “சின்ன தல” என்ற பெயரும் வந்தது. அந்த அளவிற்கு கிரிக்கெட்டில் தன் திறமையை காண்பித்து தனக்கென்று ஒரு ரசிகர் கூட்டத்தையே உருவாக்கியவர்.

2019 ஆண்டு வெளியிட்ட ஒய்வு:

இப்படி தன் திறமையால் இந்திய கிரிக்கெட் அணியில் ஜொலித்து கொண்டிருந்த சுரேஷ் ரெய்னா, கடந்த 2019 ஆம் ஆண்டு சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார். இந்த அறிவிப்பு ரெய்னா ரசிகர்களிடையே மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ஆனால், ஐபிஎல் போட்டியில் தொடருவார் என்று எதிர்பார்த்து கார்த்திருந்தனர் ரெய்னா ரசிகர்கள். இருப்பினும், அதில் அவர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது.

இதையும் படிக்க: மீண்டும் எடப்பாடி கதவை தட்டும் ஓபிஎஸ் டீம்....ஈபிஎஸ் வகுக்கும் யூகம் என்ன?

ஏலம் எடுக்காத சிஎஸ்கே:

ஐபிஎல் தொடரில் மிகப்பெரிய ஜாம்பவானாக திகழ்ந்த ரெய்னா, இதுவரை ஐபிஎல் தொடரில் 200 இன்னிங்ஸ்களில் விளையாடியுள்ளார். அதில் 5,528 ரன்களை குவித்துள்ள ரெய்னா, 39 அரைசதங்களும், ஒரு சதமும் குவித்துள்ளார். ஐபிஎல் வரலாற்றில் அதிக ஸ்கோர் அடித்த வீரர்கள் பட்டியலில் 5வது இடத்தில் ரெய்னா இருப்பது குறிப்பிடத்தக்கது. ஆனால், கடந்த ஐபிஎல் மெகா ஏலத்தின் போது, 2வது சுற்றில் கூட சுரேஷ் ரெய்னாவை ஏலம் எடுப்பதற்கு சென்னை சூப்பர் கிங்ஸ் அணி  ஆர்வம் காட்டவில்லை.  அதுமட்டுமல்லாமல், அவருடைய ஃபார்ம் சரியில்லை எனக்கூறி மற்ற எந்த அணிகளும் அவரை ஏலம் எடுக்கவில்லை. இதனால் கடந்த ஐபிஎல் போட்டியின் போது கமெண்ட்ரீ கொடுத்து வந்தார். இதனால் அவருடைய ரசிகர்கள் மிகுந்த வருத்தத்தில் இருந்தனர்.

பயிற்சி வீடியோ:

எனினும், சமீபத்தில் ரெய்னாவின் பயிற்சி வீடியோ வைரலாக இணையத்தில் பரவி வந்தது. இதனால், அடுத்த ஆண்டு ஐபிஎல் போட்டியில் சுரேஷ் ரெய்னா எண்ட்ரீ கொடுப்பார் என ரசிகர்கள் மகிழ்ச்சியில் இருந்தனர். 

ரெய்னா திடீர் அறிவிப்பு:

இந்நிலையில் சுரேஷ் ரெய்னா தனது ட்விட்டர் பக்கத்தில் திடீர் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் ஐபிஎல் தொடர் உள்பட இந்தியாவின் அனைத்து உள்நாட்டு தொடர்களில் இருந்தும் ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். அத்துடன் தன் மீது நம்பிக்கை வைத்த அத்தனை பேருக்கும், ரசிகர்களுக்கும் நன்றி தெரிவித்து ட்வீட் செய்துள்ளார். முன்னதாக சர்வதேச போட்டியில் இருந்து விலகிய சுரேஷ் ரெய்னா, தற்போது அனைத்து விதமான போட்டிகளில் இருந்தும் ஓய்வு பெறுவதாக ரெய்னா அறிவித்திருப்பது ரசிகர்களிடையே மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அடுத்த ஐபிஎல்லில் தோனி; அப்போ ரெய்னா?:

கடந்த ஐபிஎல் - ன் போது சிஎஸ்கேவின் கேப்டனாக ரோஹித் சர்மா பங்கேற்று வழிநடத்தி வந்தார். ஆனால், போன் ஐபிஎல் போட்டியில் சிஎஸ்கே சரியாக விளையாடாத கரணத்தால், மீண்டும் தோனியையே சிஎஸ்கேவின் கேப்டனாக அறிவிக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகின்றது. இந்நிலையில் அடுத்த ஆண்டு சிஎஸ்கேவின் கேப்டனாக தோனி பொறுப்பேற்கவுள்ள நிலையில், ரெய்னாவின் இந்த அறிவிப்பு கிரிக்கெட் ரசிகர்களிடம் சற்று அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.