8 பதக்கங்களுடன் வீடு திரும்பிய இந்திய குத்துச்சண்டை வீரர்கள்...

உலக குத்துச்சண்டை தொடரில் இந்தியாவுக்கு 3 வெள்ளிப்பதக்கங்கள் கிடைத்துள்ளன.

8 பதக்கங்களுடன் வீடு திரும்பிய இந்திய குத்துச்சண்டை வீரர்கள்...

பல்கேரியாவில் நடைபெற்ற குத்துச்சண்டை தொடரில் இந்தியாவின் அனாமிகா, அனுபமா மற்றும் கோவிந்த் ஆகியோர் வெள்ளி வென்றுள்ளனர். மகளிர் 81 கிலோ எடைப்பிரிவில் ஆஸ்திரேலிய வீராங்கனை எம்மாவிடம் பூஜ்ஜியத்திற்கு 5 என்ற புள்ளிகள் கணக்கில் அனுபமா தோல்வி கண்டார்.

50 கிலோ எடைப்பிரிவில் சீன வீராங்கனை ஹூ மெயி-யிடம் அனாமிகா தோல்வியைத் தழுவினார். இதேபோல், ஆடவர் 48 கிலோ எடைப்பிரிவில் இந்திய வீரர் கோவிந்த் சஹானி, உஸ்பெகிஸ்தான் வீரரிடம் தோல்வி அடைந்து வெள்ளிப் பதக்கம் வென்றார்.

மேலும் படிக்க | 76 வயதில் தடகளம்.... தேசிய போட்டியில் சாதனை செய்த சாமுவேல்!!!

மொத்தத்தில், அனுபமா, அனாமிகா மற்றும் கோவிந்த் வீரர்கள் வெள்ளிப்பதக்கங்களும், கலைவானி, ஷ்ருதி, மோனிகா, சச்சின் மற்றும் நிஸ்வாமித்ரா ஆகியோர் வெண்கல பதக்கங்களும் வென்றுள்ளனர்.

இவர்களது வெற்றியைக் கொண்டாடும் வகையில், இந்திய குத்துச்சண்டை கூட்டமைப்பு (Boxing Federation) தங்களது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இவர்களது போட்டோக்களை பதிவிட்டு பெருமை பதிவு போட்டுள்ளது. இதற்கு பலரும் பதில் பதிவிட்டு தங்களது வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.

--- பூஜா ராமகிருஷ்ணன்

மேலும் படிக்க | IND VS AUS : 2 வது டெஸ்ட் தொடரிலும் அசத்திய இந்திய அணி...!


தென் கொரியாவில் நடைபெற்று வரும் தடகள போட்டியில் மேலும் மூன்று பதக்கங்களை இந்தியா குவித்துள்ளது. 


தென்கொரியாவில் உள்ள யெச்சியோனில் ஆசிய U - 20 தடகள சாம்பியன்ஷிப் போட்டி நடைபெற்றது. இதில், பெண்களுக்கான 400 மீட்டர் போட்டியில் 53 புள்ளி 31 வினாடிகளில் ஓடி இந்தியாவின் ரெசோனா மல்லிக் ஹீனா முதல் தங்க பதக்கத்தை வென்றார். 

இதையும் படிக்க : நாட்டையே பெரும் சோகத்தில் ஆழ்த்திய ரயில் விபத்து...சென்னை வந்தடைந்த 17 பயணிகள்!

இதேபோன்று ஆண்களுக்கான வட்டு எறிதல் போட்டியில் பாரத்ப்ரீத் சிங்கும் 55 புள்ளி 66 மீட்டர் எறிந்து 2ஆவது தங்கத்தை வென்றார். 

மேலும், பெண்களுக்கான ஐந்தாயிரம் மீட்டர் தடகள போட்டியில் அந்திமா பால் வெண்கலம் வென்று அசத்தியுள்ளார்.

எங்கள் சாம்பியன்கள் மனிதாபமற்ற முறையில் நடத்தப்படுவது வேதனையளிக்கிறது என மல்யுத்த வீராங்கனைகளை ஆதரித்து 1983ம் ஆண்டு உலகக் கோப்பை வென்ற கபில்தேவ் தலைமையிலான கிரிக்கெட் அணி அறிக்கை வெளியிட்டுள்ளது.

பாலியல் குற்றச்சாட்டுகளுக்கு உள்ளான இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் முன்னாள் தலைவரும் பாஜக எம்பியுமான பிரிஜ் பூஷனை கைது செய்யக்கோரி போராட்டத்தில் ஈடுபட்ட மல்யுத்த வீராங்கனைகள் குண்டுக்கட்டாக கைது செய்யப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்டனர். பின்னர் தங்கள் பதக்கங்களை ஹரித்துவாரின் கங்கையில் வீராங்கனைகள் தூக்கியெறியச் சென்றதும் பேசுபொருளானது. இந்நிலையில் பல ஆண்டு முயற்சி, தியாகம், மனவலிமை உள்ளிட்டவற்றின் அடையாளமான பதக்கங்கள், தேசத்திற்கே பெருமையளித்தவை என 1983ம் ஆண்டு உலகக்கோப்பை வென்ற இந்திய கிரிக்கெட் அணியினர் அறிக்கை வெளியிட்டுள்ளனர். 

எங்கள் சாம்பியன்கள் மனிதாபிமானமற்ற முறையில் கையாளப்படுவது வேதனையளிக்கிறது எனவும் கங்கையில் பதக்கங்களை தூக்கியெறிவோம் என அவசர முடிவெடுக்க வேண்டாம் எனவும் அறிக்கையில் கேட்டுக்கொண்டுள்ளனர்.  விரைவில் அவர்தம் கோரிக்கைகள் கேட்கப்பட்டு பிரச்னைகள் தீர்க்கப்படும் என நம்புவதாகவும், நாட்டில் சட்டம் ஒழுங்கு மேலோங்கட்டும் எனவும் கூறப்பட்டுள்ளது. கபில்தேவ், மொஹிந்தர் அமர்நாத், ஸ்ரீகாந்த், சயூத் கிர்மானி, யஷ்பால் சர்மா, மதன்லால், பல்வீந்தர் சிங் சது, சந்தீப் பாட்டில், கிர்த்தி ஆசாத், ரோகர் பின்னி ஆகியோரின் தரப்பில் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்க:வாடகைக்கு வீடெடுத்து குத்தகைக்கு விட்டு பல லட்சம் ரூபாய் மோசடி செய்த தம்பதியினர் கைது!

5 வது முறையாக சாம்பியன் பட்டம் வென்ற சென்னை அணிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ட்விட்டரில் வாழ்த்து தெரிவித்துள்ளார். 

16-வது ஐபிஎல் தொடரின் இறுதி ஆட்டத்தில் குஜராத் அணியை 5 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி சென்னை அணி கோப்பையை கைப்பற்றியது. இதனிடையே நெருக்கடியான சூழலை எதிர்கொண்ட ஜடேஜா, சிஎஸ்கே அணிக்கு ஒரு வரலாற்று வெற்றியை உறுதிப்படுத்தியதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவரது ட்விட்டர் பக்கத்தில், ஐபிஎல் கோப்பையை வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் மஞ்சள் படைக்கு வாழ்த்துக்கள் என்று பதிவிட்டுள்ளார். மேலும்  "ஒவ்வொரு சூழ்நிலைக்கும் ஒரு திட்டத்துடன் தோனி என்ற மனிதனின் கீழ் 5வது ஐபிஎல் கோப்பையை வென்ற சிஎஸ்கேயின் மஞ்சள் படைக்கு வாழ்த்துக்கள்” எனவும் குறிப்பிட்டுள்ளார்.

இதையும் படிக்க : 5 வது முறை பட்டத்தை வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணி...மும்பை அணியை சமன் செய்து சாதனை!

இதனிடையே சென்னை தீவுத்திடலில் அமைக்கப்பட்ட பெரிய எல் இ டி திரையில் சென்னை - குஜராத் அணிகளின் இறுதிப்போட்டி பெரிய திரையில் ரசிகர்களுக்காக சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. சென்னையின் வெற்றி குறித்து ரசிகர்கள் கூறுகையில், மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்ற இறுதி போட்டியில் சென்னை அணி வெற்றி பெற்றது அளவில்லாத மகிழ்ச்சி எனவும், கடைசி வினாடி வரை பரபரப்பாக நடைபெற்ற போட்டியில் ஜடஜா அணியை வெற்றி பெற வைத்தது மிகவும் மகிழ்ச்சி எனவும் தெரிவித்தனர்.   

மேலும் ஐந்து முறை பட்டம் பெற்று முதலிடத்தில் இருக்கும் மும்பை அணிக்கு நிகராக சென்னை அணியும் ஐந்தாவது முறை கோப்பையை வென்றது அளவில்லாத மகிழ்ச்சி எனவும் ரசிகர்கள் தெரிவித்தனர்.

16 ஆவது ஐபிஎல் தொடரின் குஜராத் அணிக்கு எதிரான இறுதி ஆட்டத்தில் 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் சென்னை அணி வெற்றி பெற்று 5-வது முறையாக கோப்பையை கைப்பற்றியுள்ளது.


16வது ஐபிஎல் தொடரின் சாம்பியனை தீர்மானிக்கும் இறுதி போட்டி குஜராத்தின் அகமதாபாத்தில் நடைபெற்றது. சென்னை சூப்பர் கிங்ஸ் – குஜராத் டைட்டன்ஸ் அணிகள் இடையேயான இந்த போட்டியில் டாஸ் வென்ற சென்னை அணியின் கேப்டன் தோனி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார்.

இதனையடுத்து முதலில் பேட்டிங் செய்த குஜராத் அணி 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்டுகளை இழந்து 214 ரன்கள் குவித்தது. இதன்பின் 215 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடின இலக்குடன் களமிறங்கிய சென்னை அணி முதல் ஓவரில் பேட்டிங் செய்து கொண்டிருந்த போது மழை குறுக்கிட்டு, போட்டியை கிட்டத்தட்ட 2 மணி நேரத்திற்கு மேல் தாமதப்படுத்தியதால் போட்டியின் ஓவர் 15ஆக குறைக்கப்பட்டு, வெற்றி இலக்கும் 171ஆக நிர்ணயிக்கப்பட்டது.

இதையும் படிக்க : அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு ராகுல்காந்தி ஆதரவளிப்பாரா? மாநிலங்களவையில் ஆம் ஆத்மி பெரும்பான்மை வகிக்குமா?

90 பந்துகளில் 172 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு வெற்றி தோல்வியை தீர்மானிக்கும் கடைசி ஓவரின் முதல் 4 பந்தையும் மோஹித் சர்மா சிறப்பாக வீசியதால் கடைசி 2 பந்தில் 10 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற மிக இக்கட்டான நிலையை சென்னை அணி சந்தித்தது.

கடைசி இரண்டு பந்துகளை எதிர்கொண்ட ஜடேஜா 5வது பந்தில் ஒரு சிக்ஸரும், கடைசி பந்தில் ஒரு பவுண்டரியும் அடித்து சென்னை அணிக்கு மறக்க முடியாத வெற்றியை பெற்று கொடுத்தார். இதன் மூலம் குஜராத் அணியை 5 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்திய சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 5வது முறையாக சாம்பியன் பட்டத்தையும் வென்றது. மேலும் 5 முறை சாம்பியன் பட்டம் வென்ற மும்பை அணியின் சாதனையை சென்னை அணி சமன் செய்தது.

16 வது ஐபிஎல் தொடரின் இறுதி ஆட்டம் தொடர்மழையால் ரத்து செய்யப்பட்டுள்ளது.

நடப்பு ஐபிஎல் தொடரின் இறுதிப்போட்டி நேற்று அகமதாபாத்தில் நடைபெற இருந்தது.  சென்னை சூப்பர் கிங்ஸ் - குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோத இருந்தன. இப்போட்டி நேற்று மாலை மாலை 7.30 மணிக்கு போட்டி தொடங்கப்பட இருந்தது. ஆனால், அப்போது மழை பெய்த காரணத்தால் போட்டி 9.30 மணிக்கு தொடங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது. ஆனால் அப்போதும் மழை பெய்ததால் போட்டி திரும்பவும் ஒத்தி வைக்கப்பட்டது. இந்நிலையில் 11 மணிக்குள் மழை நின்றால் போட்டி நடைபெறும் என்றும் இல்லையெனில் மறுநாள் நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டது.

 

இந்நிலையில், தொடர்ந்து நீடித்த கனமழையால் ஆட்டம் ரத்து செய்யப்பட்டுவதாக அறிவிக்கப்பட்டது. அதனை தொடர்ந்து ரிசர்வ் டே முறைப்படி ஆட்டம் இன்று இரவு 7.30 மணிக்கு அதே மைதானத்தில்  நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு நேற்றைய போட்டிக்கான டிக்கட்டுகளே இன்றைய போட்டிக்கும் செல்லும் எனவும தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் நேரில் டிக்கெட் வாங்கியவர்கள் அதனை தவறாமல் எடுத்து வருமாறும், ஆன்லைன் மூலமாக டிக்கெட் பெற்றவர்களுக்கு எவ்வித சிக்கலும் இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிக்க:அடுத்தக்கட்ட ஆளுமைகள்!