IND VS AUS : 2 வது டெஸ்ட் தொடரிலும் அசத்திய இந்திய அணி...!

IND VS AUS : 2 வது டெஸ்ட் தொடரிலும் அசத்திய இந்திய அணி...!
Published on
Updated on
1 min read

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலிய அணி, ”பார்டர்-கவாஸ்கர்” கோப்பைக்கான 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான முதல் போட்டியில் இந்தியா வென்றது.

இதனைத்தொடர்ந்து, இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான 2 வது டெஸ்ட் போட்டி டெல்லியில் உள்ள அருண்ஜெட்லி ஸ்டேடியத்தில் நடைபெற்றது. கடந்த 17 ஆம் ஆண்டு தொடங்கிய இந்த போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட் செய்த ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்சில் 263 ரன்னில் ஆட்டமிழந்தது. இதையடுத்து தனது முதல் இன்னிங்சை தொடங்கிய இந்திய அணி 262-ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.

இதையும் படிக்க : வாக்காளர்களின் தரவுகள் விற்பனையாகிறதா...? முற்றுப்புள்ளி வைத்த தேர்தல் அலுவலர்!
 
இதையடுத்து 1 ரன் முன்னிலையுடன் 2-வது இன்னிங்சை தொடங்கிய ஆஸ்திரேலிய அணி நேற்றைய ஆட்டத்தின் முடிவில் 12 ஓவர்களில் ஒரு விக்கெட்டுக்கு 61 ரன்கள் எடுத்து இருந்தது. தொடர்ந்து இன்று 3-ஆம் நாள் ஆட்டம் தொடங்கியதும் ஆஸ்திரேலிய அணி கிடுகிடுவென விக்கெட்டுகளை பறிகொடுத்தது. அதன்படி உணவு இடைவேளைக்கு முன்பாகவே 9 விக்கெட்டுகளையும் இழந்த ஆஸ்திரேலிய அணி, ஆட்ட இறுதியில் 113 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தது. 

இந்நிலையில் தனது 2 வது களமிறங்கிய இந்திய அணிக்கு வெற்றி இலக்காக 115-ரன்கள் நிர்ணயிக்கப்பட்டது. அதன்படி, இந்திய வீரர்கள் சிறப்பாக ஆடியதால் 26 புள்ளி 4 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 118 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது இதன் மூலம் 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்திய அணி 2க்கு பூஜ்ஜியம் என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது. 

இதைத்தொடர்ந்து, இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான 3 வது டெஸ்ட் போட்டி வரும் மார்ச் 1 ஆம் தேதி இந்தூரில் தொடங்க உள்ளது.
 

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com