வேகப்பந்து வீச்சாளர் பும்ரா விலகல்...பிசிசிஐ சொல்வது என்ன?

வேகப்பந்து வீச்சாளர் பும்ரா விலகல்...பிசிசிஐ சொல்வது என்ன?
Published on
Updated on
1 min read

இலங்கைக்கு எதிரான ஒருநாள் போட்டியில் இருந்து இந்திய அணியின் பும்ரா விலகி இருப்பது கிரிக்கெட் ரசிகர்களிடையே குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. 

வேகபந்து வீச்சாளர் பும்ரா விலகல்:

இந்தியா - இலங்கை அணிகளுக்கு இடையேயான 3 ஒருநாள் போட்டிகளில் முதல் ஒருநாள் போட்டி நாளை கவுகாத்தியில் நடைபெறவுள்ளது. இந்நிலையில் இந்திய அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளரான ஜஸ்பிரித் பும்ரா இலங்கை தொடரில் இருந்து முற்றிலுமாக விலகுவதாக பிசிசிஐ அறிவித்துள்ளது. பந்துவீசும் அளவுக்கான உடற்தகுதியை அடைய இன்னும் சிறிதுகாலம் தேவைப்படுவதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

கடந்த அக்டோபர் மாதத்தில் இருந்தே காயம் காரணமாக விலகியிருந்த பும்ரா, கடந்த ஜனவரி 3 ஆம் தேதி தான் அணியில் சேர்க்கப்பட்டார். ஆனால், தற்போது  மீண்டும் பந்துவீச்சை வலுப்படுத்த இன்னும் சிறிது காலம் தேவைப்படுவதால் பும்ரா விலகுவதாக பிசிசிஐ அறிவித்துள்ளது, ரசிகர்களிடையே பெரும் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com