விறுவிறுப்பான இறுதிக்கட்டம்: சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினார் கோகோ காப்...!

விறுவிறுப்பான இறுதிக்கட்டம்: சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினார் கோகோ காப்...!

அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடாில் பெண்கள் ஒற்றையா் பிாிவில் அமெரிக்க வீராங்கனை கோகோ காப் சாம்பியன் பட்டத்தை கைப்பற்றி அசத்தினாா்.

அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடா் நியூயார்க் நகரில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் நள்ளிரவில் நடைபெற்ற பெண்கள் ஒற்றையர் பிரிவின் இறுதி ஆட்டத்தில் பெலாரஸ் வீராங்கனை அரினா சபலென்கா, அமெரிக்கா வீராங்கனை கோகோ காப்புடன் மோதினார்.

இதையும் படிக்க : ஜி20 மாநாடு; பிரமாண்ட அறையில் நடைபெற்ற சிறப்பு சைவ விருந்து... !

விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில், முதல் செட்டை சபலென்கா 6 க்கு 2 என்ற கணக்கில் வென்று அசத்தினாா். இதனையடுத்து, சுதாரித்துக் கொண்ட கோகோ காப் அடுத்த இரு செட்களை 6 க்கு 3, 6 க்கு 2 என்ற செட் கணக்கில் வென்று அசத்தினாா். இதன் மூலம் கோகோ காப் சாம்பியன் பட்டத்தை கைப்பற்றி அசத்தினாா்.

முன்னதாக நடைபெற்ற கலப்பு இரட்டையர் இறுதி போட்டியில் அமெரிக்கா இணையான ஜெசிகா பெகுலா, ஆஸ்டின் கிராஜிசெக்கை, கஜகஸ்தானின் அன்னா டானிலினா, பின்லாந்தின் ஹாரி ஹெலியோவாரா இணை எதிர்கொண்டது. விறுவிறுப்பான இந்த ஆட்டத்தில் அமெரிக்க இணையை 6 -க்கு 3, 6 -க்கு 4 என்ற செட் கணக்கில் வீழ்த்தி டானிலினா, ஹெலியொவாரா இணை சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது.