பா. ராமச்சந்திர ஆதித்தனார் நினைவு கோப்பை டென்னிஸ் போட்டி: 'BENZ' காரை தட்டி செல்லப்போவது யார்?

பா. ராமச்சந்திர ஆதித்தனார் நினைவு கோப்பை டென்னிஸ் போட்டி: 'BENZ' காரை தட்டி செல்லப்போவது யார்?

மாலைமுரசு அதிபர் பா. ராமச்சந்திர ஆதித்தனார் நினைவு கோப்பை டென்னிஸ் போட்டியின் மூன்றாம் நாளில் 8 அணிகள் பங்கேற்று விளையாடி வருகின்றன. 

சென்னை, அடையாறில் உள்ள காந்திநகர் கிளப் டென்னிஸ் மைதானத்தில் ராமச்சந்திர ஆதித்தனார் நினைவு கோப்பை, ஆண்களுக்கான டென்னிஸ் போட்டி கடந்த 2 ஆம் தேதி தொடங்கியது. இப்போட்டியில் இந்தியா, பிரான்ஸ், ஜப்பான், உக்ரைன், ஸ்பெயின் உட்பட 9 சர்வதேச நாடுகளை சேர்ந்த வீரர்கள் பங்கேற்று விளையாடி வருகின்றனர். 

இதையும் படிக்க : வரும் ஏப்ரல் 7 ஆம் தேதி அதிமுக செயற்குழு கூட்டம்...!

அதன் தொடர்ச்சியாக இன்று நடைபெற்ற போட்டியில், கஜகஸ்தானைச் சேர்ந்த க்ரிகோரி லோமகின் மற்றும் இந்தியாவை சேர்ந்த தேஜோஸ் ஜெய பிரகாஷ் ஆகியோர் மோதின. தனிநபர் ஆட்டத்தில் 4 அணிகளும் இரட்டையர் ஆட்டத்தில் 8 அணிகளும்  விளையாட உள்ள நிலையில், வெற்றி பெற்று முன்னணி புள்ளிகள் பெறும் வீரர்கள்  இறுதி போட்டிக்கு முன்னேறுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இறுதி சுற்றில் வெற்றி பெறும் அணிக்கு பா.இராமச்சந்திர ஆதித்தனார் நினைவு கோப்பை மற்றும் வெற்றி பெறும் வீரர்களுக்கு  உயர் ரக பென்ஸ் கார் மாலை முரசு நிர்வாக இயக்குனர் கண்ணன் ஆதித்தனார் வழங்கி கௌரவிக்க உள்ளார்.