வரும் ஏப்ரல் 7 ஆம் தேதி அதிமுக செயற்குழு கூட்டம்...!

வரும் ஏப்ரல் 7 ஆம் தேதி அதிமுக செயற்குழு கூட்டம்...!

அதிமுக செயற்குழு கூட்டம் வரும் ஏப்ரல் 7-ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அதிமுக செயற்குழு கூட்டம் தொடர்பாக அக்கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், சென்னை ராயப்பேட்டையில் உள்ள தலைமை அலுவலகத்தில் அவைத் தலைவர் தமிழ்மகன் உசேன் தலைமையில் வருகின்ற ஏப்ரல் 7 ஆம் தேதி பிற்பகல் 12 மணி அளவில் அதிமுக செயற்குழு கூட்டம் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிக்க : சமூக நீதிக்கான முதல் தேசிய மாநாடு...உரையாற்றிய முதலமைச்சர்!

இதில்  தலைமைக் கழக செயலாளர்கள், மாவட்ட செயலாளர்கள், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், தலைமை செயற்குழு உறுப்பினர்கள் உள்ளிட்டோர் பங்கேற்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், ஏப்ரல் 7-ஆம் தேதி நடைபெறுவதாக இருந்த மாவட்ட செயலாளர்கள் ஆலோசனைக் கூட்டம் ரத்து செய்யப்படுவதாகவும் அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.