இந்தியா - ஐக்கிய அரபு அமீரக வர்த்தகம், விரைவில் 100 பில்லியன் டாலர்களை எட்டும் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
இருநாள் பயணமாக பிரான்ஸ் சென்றடைந்த பிரதமர் மோடி, பாரிசில் தேசிய தின அணிவகுப்பில் பங்கேற்றார். தொடர்ந்து அங்கிருந்து அபுதாபி சென்றடைந்த அவருக்கு, சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.
இதையடுத்து அபுதாபி நேஷனல் ஆயில் நிறுவன சி.இ.ஓ-ம், ஐநா காலநிலை மாற்ற மாநாட்டுத் தலைவருமான சுல்தான் அல் ஜாஃபரை பிரதமர் மோடி சந்தித்துப் பேசினார். அப்போது காலநிலை மாற்றத்தை எதிர்கொள்ளும் வகையிலான இந்தியாவின் முன்முயற்சிகள் தொடர்பாக பிரதமர் மோடி எடுத்துரைத்தார்.
இதையும் படிக்க : முதலமைச்சருக்கும், அமைச்சர் உதயநிதிக்கும் அண்ணாமலை சொன்ன அட்வைஸ்...!
இதைத்தொடர்ந்து அபுதாபி அதிபர் ஷேக் அல் நஹ்யானை சந்தித்த பிரதமர் மோடி இருதரப்புப் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார். அப்போது எரிசக்தி, உணவுப் பாதுகாப்பு, ராணுவம், அறிவியல் மற்றும் தொழில்நுட்பம், வர்த்தகம், முதலீடுகள், கல்வி உள்ளிட்டவை தொடர்பான முக்கிய ஒப்பந்தங்கள் இருநாடுகளின் சார்பிலும் பரிமாறிக் கொள்ளப்பட்டன.
தொடர்ந்து பேசிய பிரதமர் மோடி, அமீரக நாடுகளை இந்தியா ஒரு நண்பன் போல் அணுகுவதாகவும், இரு சகோதரர்கள் சந்தித்துக் கொள்ளும் நிகழ்வாய் இது அமைவதாகவும் தெரிவித்தார். இன்றைய ஒப்பந்தங்களின்படி, 20 சதவீதம் அதிகரித்த இருநாட்டு வர்த்தகம் 85 பில்லியன் டாலர்களை நெருங்கியுள்ளதாக குறிப்பிட்ட பிரதமர் மோடி, விரைவில் 100 பில்லியன் டாலர் இலக்கை எட்டும் எனவும் கூறினார்.