பிரான்சில் கேன்ஸ் திரைப்பட விழா 2023...ரசிகர்களை கவரும் உடையில் வந்த மனுஷி சில்லர்!

பிரான்சில் கேன்ஸ் திரைப்பட விழா 2023...ரசிகர்களை கவரும் உடையில் வந்த மனுஷி சில்லர்!
Published on
Updated on
1 min read

’கேன்ஸ் திரைப்பட விழா 2023’ சிவப்புக் கம்பள வரவேற்பில் முன்னாள் உலக அழகி மனுஷி சில்லர் உள்ளிட்டோர் கலந்துகொண்டு, ஸ்டைலான உடையில் தோன்றி காட்சியளித்தனர். 

பிரான்சில் ஒவ்வொரு ஆண்டும் நடக்கும் கேன்ஸ் திரைப்பட விழாவிற்கு உலகளவில் எதிர்பார்ப்பு இருக்கிறது. அப்படி உலகப் புகழ் பெற்ற இந்த ‘கேன்ஸ் திரைப்பட விழா’ பிரான்ஸ் நாட்டில் உள்ள கான் நகரில் நடைபெற்றது. அந்த வகையில்  76-வது ‘கேன்ஸ் திரைப்பட விழா வரும்  27 ஆம் தேதி வரை நடைபெறுகிறது.

இந்த விழாவில் உலகில் பல்வேறு நாடுகளில் இருந்தும் ஆவணப்படங்கள், திரைப்படங்கள் உள்ளிட்டவை திரையிடப்படுகின்றன. இந்தியாவில் இருந்து 3 படங்கள் திரையிடப்படவுள்ளன. அனுராக் காஷ்யப் இயக்கிய ‘கென்னடி’ படம் மிட்நைட் ஸ்கீரினிங் பிரிவிலும், ராகுல் ராய் நடித்த ‘ஆக்ரா’ படம் ஃபோர்ட்நைட் பிரிவிலும் மற்றும் மணிப்பூரில் 1990ஆம் ஆண்டு வெளியான ‘இஷானோ’ படம் ப்ரஸ்டீஜியஸ் கேன்ஸ் கிளாசிக் பிரிவிலும் திரையிடப்படவுள்ளன.

இந்த விழாவின் பிரபலமாக இருக்கும் சிவப்பு கம்பளம் நிகழ்வில் நடிகைகள் ஐஸ்வர்யா ராய் பச்சன், முன்னாள் உலக அழகி மனுஷி சில்லர், சாரா அலி கான், அனுஷ்கா சர்மா மற்றும் மிருணால் தாக்கூர் உள்ளிட்டோர் கலந்து கொண்டு ரசிகர்களுக்கு போஸ் கொடுத்தனர். 

இந்த நிலையில், கேன்ஸ் திரைப்பட விழா 2023 சிவப்பு கம்பள நிகழ்வில் முன்னாள் உலக அழகி மனுஷி சில்லர் கேன்ஸ் திரைப்பட விழாவின் சிவப்புக் கம்பளத்தை அலங்கரித்துள்ளார். மேலும் அவர் தனது உடையில் வெள்ளை நிற சிண்ட்ரெல்லா போல காட்சியளித்தார். இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. 

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com