”2000 ரூபாய் நோட்டு அறிமுகம் செய்தது இமாலய பிழை" - ப.சிதம்பரம் விமர்சனம்!

”2000 ரூபாய் நோட்டு அறிமுகம் செய்தது இமாலய பிழை" - ப.சிதம்பரம் விமர்சனம்!

2 ஆயிரம் ரூபாய் நோட்டை அறிமுகம் செய்தது இமாலய பிழை என  முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம் விமர்சித்துள்ளார்.  

ராஜீவ்காந்தி நினைவு நாளை முன்னிட்டு மாவட்ட இளைஞர் காங்கிரஸ் சார்பில் காரைக்குடி எம்.பி அலுவலகத்தில் இரத்த தான முகாம் நடைபெற்றது. 

இதையும் படிக்க : பப்புவா நியூ கினியாவுக்கு புறப்பட்டு சென்ற பிரதமர் மோடி...வழக்கத்தை மாற்றிய நாட்டினர்!

இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பின் செய்தியாளர்களிடம் பேசிய ப.சிதம்பரம், கருப்பு பணத்தை பதுக்குகிறார்கள் என்று 2 ஆயிரம் ரூபாய் நோட்டை அறிமுகம் செய்தது இமாலய பிழை என்று கூறியவர், பிழையை 7 ஆண்டுகளுக்கு பிறகு திருத்தி கொள்கிறார்கள் என்பது மகிழ்ச்சி அளிப்பதாக கூறியுள்ளார். 

தொடர்ந்து பேசிய அவர், சந்தைகொடுக்கல் வாங்கல் உள்ளிட்ட நிகழ்வுகளில் 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் புழக்கத்தில் கிடையாது என்றும், 2 ஆயிரம் ரூபாய் நோட்டு அனைத்தும் மிகப்பெரிய கட்டுமான நிறுவனங்கள், மொத்த வியாபாரிகள் கையில் மட்டுமே இருப்பதாகவும் குற்றம்சாட்டினார்.